Saturday, June 16, 2012

விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார் ?

Courtesy : screencreator


விஜய் -அஜித் ஹிட் படம் அதிகம் கொடுத்தது யார்.
எனக்கு  இருவரையுமே பிடிக்கும்.எதோ ஒரு பக்கம் எழுதவேண்டும் என்றில்லை.



இருவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு.அஜித் தான் தற்போது இருக்கிற ஹீரோக்களில் அழகானவர்.அதேபோல் விஜய் போல் நடனம்,காமெடி,சண்டை ஓரளவு நடிப்பு என்று எல்லாவற்றிலும் தனித்திறமை கொண்டவர் தமிழில் இல்லை.  இதை யாரும் மறுப்பதிற்கில்லை.இவர்கள் படங்கள் ஓடுவது எப்படி? இவர்கள் படங்கள் ஓடும் முறை பற்றி பாப்போம்.அஜித்திற்கு ரசிகர்கள் நூறு பேர் என்று வைத்துக்கொள்வோம்.அந்த நூறு பேருமே முதல் இரண்டு மூன்று நாட்களில் படம் பார்க்க முந்துவார்கள்.அதனால் பட வெளியீடு நாளில் கூட்டம் அள்ளும்.ஆனால் ரசிகர்ள் பார்த்த பின் நடுநிலையாளர்கள்,குடும்பத்தோடு செல்பவர்கள் அஜித் படத்திற்கு செல்வது குறைவு.படம் ரிசல்ட் பார்த்தே வருவார்கள்.அதனால் நான்காம் ஐந்தாம் நாளிலேயே கூட்டம் அடங்கிவிடும்.விஜய் படங்கள் வேறு மாதிரி.முதல் நாட்களில் முக்கால் வாசி ரசிகர்கள் பார்த்து விடுவார்கள்.பின்பு படம் எப்படி இருந்தாலும் குடும்பத்தோடு வருபவர்கள் விஜய் படத்திற்கு தான் அதிகம்.காரணம் நிச்சயமாக பாட்டு,காமெடி ஓரளவு படம் பார்க்கும் படி இருக்கும்.அதிலும் சில  படங்கள் தேறாது.ரசிகர்களை விட்டுவிடுங்கள் நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் இருவரில் யார் படத்தை அதிகம் பார்த்திருப்பீர்கள் என்று யோசியுங்கள் நான் சொல்வதன் உண்மை புரியும்.


இனி இருவரின் ஹிட் படங்களை பற்றி பார்ப்போம்.என்ன அளவுகோல்.இருவரின் ஐம்பது படங்கள் எடுத்து கொள்வோம்.சூப்பர் ஹிட், ஹிட், சுமார் படங்களை பிரித்து கொள்வோம்.சரி ஹிட் படங்களில் பலர் வேறு படலாம்.ஏன்.?சிலர் ஒரு படத்தை  ஹிட் என்பார்கள்.சிலர் அது  பிளாப் படம் என்பார்கள்.அதனால் எல்லோரும் ஹிட் என்று ஒத்துகொள்கிற படங்களை எடுத்து கொள்வோம் .உதாரணமாக விஜய்க்கு கில்லி சூப்பர் ஹிட் என்பதையோ,அஜித்திற்கு வாலி சூப்பர் ஹிட் என்பதையோ எவரும் மறுக்க மாட்டார்கள்.அப்படி பிரிப்போம்.



சூப்பர் ஹிட்
  
                 விஜய்                                                                                  அஜித் 
1.பூவே உனக்காக 

2. லவ் டுடே 

3.காதலுக்கு மரியாதை 

4.துள்ளாத மனமும் துள்ளும்

5.குஷி

6.பிரெண்ட்ஸ் 

7.கில்லி 

8.திருப்பாச்சி 

9.போக்கிரி 
1. ஆசை 

2.காதல் கோட்டை 

3.வாலி 

4.தீனா

5.வரலாறு 

6.பில்லா 

7.மங்காத்தா 


ஹிட் படங்கள் :
1.ரசிகன் 

2.ஒன்ஸ் மோர் 

3.நேருக்கு நேர் 

4.நினைத்தேன் வந்தாய்.

5.பிரியமானவளே 

6.திருமலை 

7.சிவகாசி 


1.வான்மதி 

2.சிட்டிசன் 

3.வில்லன் 

4.அமர்க்களம் 

சுமார் படங்கள் :
1.ப்ரியமுடன் 

2.பத்ரி 

3.யூத் 

4.மதுர 


 1. காதல் மன்னன் 

2.அவள் வருவாள 

3.   முகவரி 

4. அட்டகாசம் 



எப்படி பார்த்தாலும் அஜித்தை விட விஜய் அதிக ஹிட் படங்கள் தந்துள்ளார்.
விஜய் --20/50
அஜித் -14/50 

இருவரின் ரசிகர்களுக்கும் இதில் மறுப்பு இருக்கலாம். சில படங்கள் உங்கள் ஊரில் ஓடி,ஓடாமல் இருந்திருக்கலாம்.ஆனால் உண்மை இதுதான்.இப்பதிவை எழுத காரணம் இருவரில் யார் பெரியவர் என்று இவர்கள் ரசிகர்கள் அடித்துகொல்வதை  நிறுத்த வேண்டும் என்று நினைத்தேன்.இதனால் நின்று விடுமா என்றால்,இல்லைதான்.நீங்கள் நடுநிலையாளராக இருந்தால் மேற்கொண்ட படங்களில் யார் நடித்த படத்தை அதிகம் தியேட்டர் சென்று பார்த்தீர்கள் என்று கணக்கிட்டு கொள்ளுங்கள்.அப்போது தெரிந்து விடும்.

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete