Friday, July 20, 2012

surya best 10

 courtesy: harry potter
 தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தோல்விகளோடு தொடங்கினாலும் திடீர் என அவரது வெற்றி டாப் கியருடன் எகிறியது. அங்கிருந்து அனுபவ இயக்குனர்களோடு இணைந்து பல வெற்றி படங்களை மக்கள் ரசனைக்கு ஏற்ப அளித்து வந்தார்.. இவரது படங்கள் என்றால் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் என எல்லாரும் ரசித்தனர். அதையும் தாண்டி அவருக்கும் ரசிகர்கள் சேர்ந்தபடியால் அவரது வெற்றி GRAPH ஏகத்துக்கும் எகிறியது.

 சும்மா இருந்தவர்களை சீண்டி விட்டது போல அகில இந்திய சினிமாவிற்கே சவால் விட்டு இறங்கியது 7ஆம் அறிவு. எதிர்பார்ப்போடு ஒப்பிடுகையில்
ரொம்ப குறைவு தான் என்றாலும் படம் தேறியது. ஆனால் நடிகர்களின் அரசியலில் குதிக்கும் படி செய்தது அந்த படம். சர்ச்சைகளும், கிண்டல்களும் ஏகத்துக்கு வாறபட்டார் சூர்யா. இன்று அது TWITTER வரை தொடர்கிறது.

படத்துக்கு படம் வித்தியாசம் காட்டும் சூர்யாவின் எனக்கு பிடித்த படங்கள் வரிசை

10.  பேரழகன்

சூர்யா, ஜோதிகா , விவேக் நடிப்பில் வெளிவந்தது இந்த படம். இது ரீமேக் படம் என்று நினைக்கிறேன். சபாஷ் சூர்யா. ரொம்பவே ரிஸ்க் எடுத்து இருப்பார். படம் வசூல் ரீதியில் பெரிய அளவு இல்லா விட்டாலும் நடிப்புக்காகவே சூர்யா, ஜோதிகா பாராட்டு பெற்றனர்.




முதல் தடவை பார்க்கும் போது விழுந்து விழுந்து சிரித்தாலும் இப்பொழுது அந்த படங்களின் நகைச்சுவைகளை பார்க்கும் போது கொஞ்சம் குறையுள்ளவர்களை கிண்டல் அடித்திருப்பதை குறைத்து இருக்கலாம் போல தோன்றியது.



09. ஆதவன்

கொஞ்சம் சொதப்பல் படம் தான் என்றாலும் சிரிக்க விரும்புவர்கள் பார்க்கலாம். ஒரு படத்தை நகைச்சுவையும், பாடல்களும் காப்பாத்தலாம் என்றால் நல்ல உதாரணம் ஆதவன். தீபாவளிக்கு வெளியான இந்த படம் 70 கோடி வசூல் செய்து தமிழ் சினிமா அதிக வசூல் படங்கள் வரிசையில் தன்னை இணைத்து கொண்டது.




08. பிதாமகன்

நல்ல படம், நன்றாக நடித்து இருக்கிறார்கள் என்பதை தவிர இந்த படம் வசூல் ரீதியாகவும் வெற்றி அளித்த திரைப்படம். சூர்யா இதில் கிட்டத்தட்ட 2ஆவது கதா நாயகன்.

இந்த படத்தில் இவரும், லைலாவும் சேர்ந்து அடிக்கும் லூட்டி மோதல்கள் சூப்பராக இருக்கும். மேலும் சங்கீதாவின் நடிப்பு. சூர்யா, விக்ரமின் நட்பு என படம் முடிந்த வரை எல்லா தரப்பு ரசிகர்களையும் திருப்தி தர பார்த்தது ஆனால் உலக படம் என்று சொல்லி மூட்டை கட்டி வைத்து விட்டார்கள் படத்தை..



இளைய ராஜாவின் இளங் காற்று இன்றும் வீசி உயிர் வாழுகிறது..

இது சிறந்த துணை நடிகருக்கான FILMFARE விருதை வாங்கி தந்தது.

07.  நந்தா

இது இவருக்கு டர்னிங் பாய்ன்ட் படம்.. தமிழ் சினிமா இப்படி ஒரு நடிகனையா இவ்வளவு நாள் இழந்தது என்று அனைவரையும் ஏங்க வைத்த படம்.



ராஜ்கிரண், சூர்யாவின் அம்மா, சூர்யா, லைலா எல்லாம் சூப்பர் நடிப்பு..

தமிழ் நாடு சிறந்த நடிகருக்கான ஸ்டேட் அவார்டை இவருக்கு இந்த படம் வாங்கி தந்தது.


06. காக்க  காக்க

சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ஒரு போலீஸ் திரில்லர் ஸ்டோரி. சூர்யாவிற்கு எல்லா கரக்டரும் பொருந்தும் அதுவும் பெஸ்ட் ஆக செய்வார் என்று மக்கள் மத்தியில் ஒரு உறுதியை ஏற்படுத்திய படம். ஜோதிகாவின் நடிப்பு, ஹாரிஸ் ஜெயராஜின் இசை எல்லாம் படத்துக்கு நல்ல பலம்.



05. 7ஆம் அறிவு

நல்ல படம் தான் பேசாமல் இருந்து வெளியிட்டு இருந்தால் படம் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கும் .

அவர்கள் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு படத்தில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை தாண்டி படத்தில் என்ன பிழை கண்டு பிடிக்கலாம் என்று மக்களின் ஜீன்களை (ஹி ஹி ) தூண்டி விட்ட படம்.



பாடல்களை தவிர படத்தில் எல்லாம் ஓகே ராகம் தான். எம்மா எம்மா எனக்கு மிகவும் பிடித்த பாடல்



04. அயன்

நான் அதிக முறை பார்த்த சூர்யாவின் படம். இன்னும் சலிக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை படம் நகர்ந்த விதம் சூப்பர். ஒரு தரமுள்ள மசாலா டீ குடித்தது போல அல்லது KFC குள் சென்று தலபா கட்டு பிரியாணி சாப்டது போல (ஒரு முறை இந்தியா வந்த போது சாப்டு இருக்கிறேன்) படம் தரமுள்ள பக்கா லோகலாக இருந்தது.



பாடல்கள் (நெஞ்சே, விழி மூடி, ஹனி ஹனி, பள பளக்குற,  ஓ ஆயியே) எல்லாம் சூப்பர்.

சிறந்த ENTERTAINERகான விஜய் விருதை வாங்கி தந்தது.  

03.  சிங்கம்

சூரியாவின் சினிமா வரலாற்றில் அதிக வசூலை அள்ளி கொடுத்த படம் தற்போது இது ஹிந்தி போய் அங்கேயும் பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது.



ஒரு முழு நீள ஆக்சன் படம். காக்க காக்க வின் பின் ஒரு போலிஸ் கரக்டர் மனுஷன் விறைப்பான உடம்பை வைத்து எல்லா பகுதிகளிலும் பட்டையை கிளப்பி இருப்பார்.

 சிறந்த ENTERTAINERகான விஜய் விருதை வாங்கி தந்தது.

02. வாரணம் ஆயிரம்

வெளியான மொத்த தமிழ் படங்களுக்கு (எனக்கு பிடித்த) ஒரு ரேடிங் போட்டால் கண்டிப்பாக இந்த படம் முதல் 7இற்குள் இருக்கும். பாடல்கள் படத்திற்க்கு பெரிய ப்ளஸ் .



சூரியா இந்த படத்தில் கிருஷ்ணன் என்றும் சூரியா என்றும் ரெட்டை வேடத்தில் அப்பா மகன் ஆக கலக்கி இருப்பார் . பத்திரிகைகள், இணையங்கள் மாறி மாறி பாராட்டுகளை அள்ளி தெளிக்க பட்ட படம்.

இன்றும் நெஞ்சுக்குள் மாமழையாகவே இருக்கிறது இந்த படம்.

 தமிழ் நாடு சிறந்த நடிகருக்கான ஸ்டேட் அவார்டை இவருக்கு இந்த படம் வாங்கி தந்தது.

சிறந்த நடிகருக்கான FILMFARE விருதை வாங்கி தந்தது.

சிறந்த நடிகருக்கான விஜய் விருதை வாங்கி தந்தது. 

01. கஜினி

இந்த படம் சூரியாவின் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய படம் . அஜித் நடிக்க இருந்த படம். ஏற்கனவே வெளியான சந்திரமுகி (ஏப்ரல்), அந்நியன் (ஜூன்) போட்டி போட்டு வசூலை அள்ளி கொண்டு இருந்த நேரம். S.J. சூரியாவின், சிம்புவின் படங்கள் வேறு ரிலிஸ் ஆகி ஒரு வாரம். அந்நேரத்தில்  S.J. சூரியா HAT-TRICK குடுத்த நிலையிலேயே அ.. ஆ.. படத்தை ரிலிஸ் பண்ணினார். இந்த படம் வெளியான (செப்டெம்பர்) அடுத்த மாதம் விஜயின் சிவகாசி, விக்ரமின் மஜா, தனுசின் படம் என்று படங்கள் வர போகிறது. சூரியாவின் கடைசி படங்கள்  சரியாக போகவில்லை. (மாயாவி, ஆயுத எழுத்து) முருகதாஸ் நீண்ட இடைவேளையில் கொடுக்கும் படம்.



இப்படியான சூழ்நிலையில் ஒரு படம் வசூலை கொடுத்து, பாராட்டுகளை பெற்று தமிழ் சினிமாவின் BLOCKBUSTER படங்களில் தன்னையும் இணைத்து கொண்டால் சொலவும் வேண்டுமா?

தமிழ் நாடு சிறந்த நடிகருக்கான ஸ்டேட் அவார்டை இவருக்கு இந்த படம் வாங்கி தந்தது.

No comments:

Post a Comment