Monday, June 4, 2012

அடுத்த சூப்பர் ஸ்டார் யார்?

courtesy : sengovi

விஜய், அஜித், சிம்பு என பலரும் கண் வைத்திருக்கும் விஷயம் ’சூப்பர் ஸ்டார்’ நாற்காலி. ரஜினிகாந்த் 60 வயதை தாண்டுவதால், அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி சில வருடங்களாக பத்திரிக்கைகளாலும் சினிமா ரசிகர்களாலும் எழுப்பப்படுகிறது. எனவே நாமும் அதைப் பற்றி கொஞ்சம் யோசிப்போம்.

ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்தபோது இங்கு ராஜாவாக கோலோச்சிக் கொண்டிருந்தவர் மக்கள் திலகம் என்றும் புரட்சித்தலைவர் என்றும் அழைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்கள். எம்.ஜி.ஆரின் விஷேசத்தன்மை அவரது படங்களின் மூலம் அவரைப் பற்றி உருவாக்கப்பட்டிருந்த இமேஜ். குடிக்க மாட்டார். புகைக்க மாட்டார். பொய் சொல்ல மாட்டார். யாராவது வயதான தாத்தா/பாட்டி தள்ளாடி வந்தால், தலைவர் ஓடிவந்து கை கொடுப்பார். கதாநாயகியை / தங்கச்சியை யாராவது கோட்-சூட் போட்ட ஆசாமி கற்பழிக்க முயற்சித்தால், நாம் டென்சனே ஆகவேண்டியதில்லை. எப்படியும் தலைவர் பாய்ந்து வந்து காப்பாற்றி விடுவார். ’மிஸ்டர்.பெர்ஃபெக்ட்’ என்பதே எப்போதும் அவரது கேரக்டர்.

ஆனால் அவரது இடத்தைப் பிடித்த ரஜினி, படங்களில் என்ன செய்தார்? குடித்தார். புகைத்தார். அவரே கற்பழித்தார்.எம்.ஜி.ஆரின் கேரக்டருக்கு நேரெதிரான கேரக்டர்களையே செய்தார். ஆனாலும் மக்கள் அவரையே எம்.ஜி.ஆரின் இடத்தில் வைத்தார். எந்தவொரு இடத்திலும்/படத்திலும் ரஜினி எம்.ஜி.ஆரின் ஸ்டைலையோ புகைப்படத்தையோ காட்டி வளரவேயில்லை. (எம்.ஜி.ஆர் வேறொரு நடிகருக்கே தன் முழுஆதரவைத் தந்தார்.ஆனாலும்...)சினிமாவுல அதிசயங்களில் இதுவும் ஒன்று.

ஆனால் இன்று ரஜினியின் இடத்தைப் பிடிக்க நினைக்கும் ஹீரோக்கள் அப்பட்டமாக ரஜினியைக் காப்பி அடிக்கின்றனர். எம்.ஜி.ஆரைக் காப்பி அடித்த ராமராஜன், சத்தியராஜ் போன்றோரை ஏன் மக்கள் ஒதுக்கினர்? ஒரிஜினல் எம்.ஜி.ஆர் படங்களே இருக்கும்போது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர் படங்கள் தேவையில்லை என்பதாலேயே. அப்படி இருக்கும்போது இந்த டூப்ளிகேட் ரஜினிகளை ஒரிஜினலின் இடத்தில் மக்கள் வைப்பார்களா என்பதே சந்தேகம்தான். எம்.ஜி.ஆரின் காலத்திற்கும் ரஜினியின் காலத்திற்கும் இடையில் ஜெய்கணேஷ், சிவகுமார், விஜயகுமார் என ‘சில்லுண்டி’ நடிகர்களின் காலமும் இருந்த்து. இன்றைய விஜய், அஜித் போன்றோரும் அந்த வரிசையிலோ அல்லது டூப்ளிகேட் எம்.ஜி.ஆர்கள் வரிசையிலோ  வைக்கப்படுவார்களா என்பது அவர்கள் எவ்வளவு நாள் சினிமாவில் நீடித்து வெற்றிகரமான ஹீரோவாக இருக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தது.

இப்போது அடிப்படை விஷயமான சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தைக்கு வருவோம். சூப்பர் ஸ்டார் என்பதை சினிமாவின் நம்பர்-1 ஸ்டார் என்றே அர்த்தப்படுத்திக் கொள்கிறோம். உண்மையில் அது அப்படித்தானா?

எம்.ஜி.ஆரின் காலத்தில் சூப்பர் ஸ்டார் என்ற வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டதா? அந்த வார்த்தைக்கு இன்று உள்ள மரியாதை அன்று இருந்ததா? இல்லை என்பதே பதில். சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கலைப்புலி தாணுவால் ரஜினிக்கு கொடுக்கப்பட்டபோதுகூட அதுவொரு புகழ்ச்சி வார்த்தை மட்டும்தான். இன்று இருக்கும் அர்த்தம் அன்று அதற்கு இல்லை. பின் எப்படி இன்று கவர்ச்சிகரமான வார்த்தையாக அது மாறியது?

அது ரஜினிகாந்த் என்ற தனி மனிதனின் கடும் உழைப்பாலேயே நிகழ்ந்தது. தன் உடல்நலத்தை முழுதாகக் கெடுத்துக்கொண்டு இரவும் பகலும் அயராது வெறித்தனத்துடன் நடித்தார் ரஜினி. தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு லாபத்தைக் கொடுத்து அவர்களின் செல்லப்பிள்ளையாக மாறினார். எப்போதும் படிக்காதவனாக, சாமானிய மனிதனாக படங்களில் தன் கேரக்டரை வடிவமைத்துக் கொண்டார். எந்தவொரு சூழ்நிலையிலும் எம்.ஜி.ஆர் எனும் பிரமாண்டத்தின் நிழலில் ஒதுங்காமல் தனக்கான சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பினார்.

இவ்வளவும் செய்து, எம்.ஜி.ஆரின் இடத்தில் அமர்ந்தபொழுது எம்.ஜி.ஆரின் பட்டங்களான ‘மக்கள் திலகம்’ மற்றும் ‘புரட்சித் தலைவர்’ போன்ற பட்டங்களை தனக்கு சூடிக்கொள்ளாமல் தாணு கொடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையே வைத்துக்கொண்டார்.

ரஜினி ஏன் எம்.ஜி.ஆரின் பட்டத்திற்கு ஆசைப்படவில்லை? ஏனென்றால் தன்னைப் போன்றே பல வருடங்களாகத் தன் சொந்த உழைப்பின் மூலம்தான் எம்.ஜி.ஆர் அந்தப் பட்டங்களை அடைந்தார் என ரஜினிக்குத் தெரியும். ஒரு உழைப்பாளி மற்றொரு உழைப்பாளிக்குத் தந்த மரியாதை அது.
The making of Endhiran
அது ஏன் இன்றைய நடிகர்களுக்குப் புரிவதில்லை? இவர்களும் தனக்கென உள்ள பட்டங்களுக்கான மரியாதையை தன் சொந்த உழைப்பால் ஏன் உண்டாக்கக் கூடாது? 60 வயதைக் கடந்தும் இன்னும் தனக்கான மரியாதையைத் தக்க வைத்திருக்கும் ரஜினிகாந்த் என்ற பெரியவருக்கு இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் தருகின்ற மரியாதை சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அவரிடமே விட்டு விடுவதுதான்.

எனவே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்விக்கு அன்றும் இன்றும் என்றும் ரஜினிகாந்த் என்பதே சரியான பதிலாக இருக்கும்.

6 comments:

  1. ok but why he is investing all money in bangalore...plz see that too

    ReplyDelete
  2. u see man dnt look into personal life......in cinema we talk abt super star.....@ prasanth

    ReplyDelete
  3. Hi..

    This article written without knowing the facts.. MGR can never be compared with any one including Rajinikanth. MGR's involvement in politics was a known one. But as an actor, Rajinikanth's craze is not more than MGR's. Just check with the people who are over 40...

    Sankara N, Thiagrajan

    ReplyDelete
  4. am just praised makkal thilagam ....nt compared with thalaivar.....

    ReplyDelete
  5. //prasanthJune 4, 2012 7:44 PM

    ok but why he is investing all money in bangalore...plz see that too//

    dei porambokku, adhu avar kashtapattu sambarichadhu, avar enga venumnaalum invest pannuvar.. unaku enga valikudhu.. avar enna aduthavan panathai kollai adicha invest panrar?? paavam avar kashtapattu nadichadh thane invest panrar.. unaku enga eriudhu..

    namma ooru arasiyam VIYADHI-nga ellam swizz la invest panrangale avangala poi kelu..
    pannada..

    ReplyDelete
  6. // Anonymous : be cool...... prasanth is kamal fan....so nly....thalaivar alwayz rocks....

    ReplyDelete