எச்சரிக்கை: Reset Firefox வசதியை பயன்படுத்துவதால் உங்கள் பயர்பாக்ஸ்
உலவியில் சேமித்து வைத்துள்ள Bookmarks, Cookies, Passwords, History
அனைத்தும் அழிந்து விடும். ஆகவே உங்களுக்கு அந்த விவரங்கள் ஏதும்
தேவையில்லை என்றால் தொடருங்கள்.
முதலில் பயர்பாக்ஸ் உலவியை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதில் Help - Troubleshooting Informations பகுதிக்கு செல்லுங்கள்.
உங்களுக்கு இன்னொரு விண்டோ திறக்கும் அதில் Reset Firefox என்ற ஒரு பட்டன்
இருக்கும் அதன் மீது கிளிக் செய்யுங்கள். அடுத்த விண்டோவில் உங்களின்
இறுதி அனுமதியை கேட்கும் அதில் உள்ள Reset Firefox என்ற பட்டனை அழுத்தவும்.
ஒரு சில வினாடிகளில் உங்களுடைய உலவியில் இருந்த பிழைகள் அனைத்தும் சரி
செய்யப்பட்டு புதிய பிரவுசர் தயாராகி விடும். இப்பொழுது பிரவுஸ் செய்து
பாருங்கள் பழைய வேகத்திற்கும் இப்பொழுது உள்ள வேகத்திற்கும் உள்ள
வித்தியாசத்தை உணர்வீர்கள்.
இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.
No comments:
Post a Comment