Monday, July 23, 2012

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...

courtesy : rasigan soundarapandian



warrior தேவா ரஜினி படங்களை  பற்றி தொடர் பதிவு எழுத சொன்னார் நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லை என்றாலும் ரஜினி படங்களை பார்த்து விடுவேன் ஒருதடவை படையப்பா படம் பார்க்க சென்றோம்  ரஜினி படம் பார்க்கப்போனால் டிக்கெட் உடனே கிடைத்து விடுமா என்ன...?  3 மணி ஆட்டத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்க வில்லை சரி இருந்து 6 மணி ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்..பிறகு  பாபா படம் வந்த மறுநாள் படம் பார்க்க சென்றேன் 300 ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தோம்...என்ன படம் தான் நல்லா இல்லை...!அதில் ரஜினி டான்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் இப்போது எந்திரனில் என்னமா டான்ஸ் ஆடுறார்...இதுவரை ரஜினி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார் 

10 : நினைத்தாலே இனிக்கும் 
இந்த படத்தில் கமல் கூட நடித்து இருப்பார் MSV குரலில் ரஜினி பாடும் சிவசம்போ பாடல் எனக்கு பிடிக்கும் இதில் டேப் ரெக்கார்டில் ஒரு குரல் வரும் அதை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது..அந்த காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஒரு காட்சியில் ரஜினி சிகிரெட்டை எடுத்து பற்ற வைப்பார் அதே போலே பத்து தடவை செய்யவேண்டும் என்று சொல்வார் பூர்ணம் விஸ்வநாதன், அந்த காட்சிகள் எனக்கு பிடிக்கும் 



9 : ஆறிலிருந்து அறுபது வரை
எதார்த்தமான திரைப்படம் இந்தப்படத்தை ஒரு நாள் டிவியில் பார்த்தேன். ரஜினியின் நடிப்பு அபாரமாக இருந்தது, இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும், சின்ன வயதில் அப்பா இறந்து விடுவார் ரஜினி தான் குடும்பத்தை காப்பாற்றுவார் தம்பி தங்கையை படிக்க வைத்து நல்ல படியாக வளர்ப்பார் ஆனால் தம்பி தங்கை இவருக்கு உதவி செய்ய மாட்டார்கள். இவர்கள் குடும்பம் கஷ்டப்படும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தாலி பறித்து விடுவார்கள் அப்போது ரஜினி காப்பாற்றி கொடுப்பார் அந்த பெண் வாழ்த்தி "உங்க குடும்பம் நல்லா இருக்கணும்" சொல்வார் ரஜினி வீட்டுக்கு வரும் பொழுது அவர் மனைவி குடிசை தீ  விபத்தில் இறந்து விடுவார் இந்த காட்சி உருக்கமான காட்சி. இப்போது உள்ள மனிதர்களுக்கும் இந்த கதை பொருந்தும்


8 : தில்லு முல்லு 
ரஜினியின் படங்களில் சில இடங்களில் நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த படத்தில் முழுவதும் நகைச்சுவை இருக்கும் எனக்கு அந்த இன்டர்வியூ காட்சிகள் பிடிக்கும் இறுதி காட்சியில் கமல் வருவது மேலும் சிறப்பு ...ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...


7 : படையப்பா   
இந்த படத்தில் இவர் ஓபனிங் சீன் ரொம்ப சூப்பரா இருக்கும் ye who are you man ரம்யா கிருஷ்ணன் கேட்க என் பேரு படையப்பா...என்று பாடல் ஆரம்பிக்கும் அந்த காட்சிமுதல் கடைசி காட்சி வரை ரஜினி பட்டையை கிளப்பி இருப்பார் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் படையப்பா தான் மிக பெரிய திருப்பு முனை.. பிடித்த காட்சிகள் ஒரு காட்சியில் சிவாஜி, ரஜினியை கூப்பிட்டு சல்யூட் அடிக்க சொல்வார். ரஜினி சல்யூட் அடித்தவுடன் "யாரு இவன் என் பையன்" என்று சொல்வார்....

6 : பில்லா
இந்த படத்திற்கு முன்பு தான் எம் ஜி ஆர் ரஜினியை கூப்பிட்டு "நீ என்ன சூப்பர் ஸ்டாரா" என்ன கேட்டு மிரட்டியதாக சொன்னார்கள் அதற்க்கு தான் முள்ளும் மலரும் பாடலில் "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" எனக்கு ஒரு கவலை இல்லைஎன்ற பாடல் வைத்தார்.ரஜினி பில்லா படத்திற்கு பிறகே ரஜினி சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து காட்டினார். பிடித்த காட்சிகள் ஓட்டலில் இருந்து ரஜினி தப்பிக்கும் பொழுது நடக்கும் காட்சிகள் பிடிக்கும் ரெண்டாவது ரஜினியின் நடிப்பு பிடிக்கும் இந்த படத்தை எங்க அஜித் நடித்து இருப்பார்  துளி கூட ரஜினியின்சாயல் இல்லாமல். அடுத்து "பில்லா" II வர போகிறது ...   


5 : சந்திரமுகி
பாபா படத்திற்கு பிறகு வந்த படம் "நான் யானை இல்லை குதிரை" என்று சொல்லி அதை செய்து காட்டியவர் ரஜினி. படம் முதல் பாதி காமெடியாக சென்று கொண்டு இருந்தாலும், சந்திரமுகி வந்த பிறகு படம் வேகம் அதிகரிக்கும் வேட்டையன் வந்த பிறகு அட என்னமா வில்லன் கதாபாத்திரம் நடிக்கிறார் ரஜினி இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் வேட்டையன் தான். லக்க லக்க லக்க.... சொல்லும் அந்த காட்சியை ரஜினியே வைத்து இருக்கிறார் விரைவில் "சந்திரமுகி" பார்ட் II வருகிறது 

4 : சிவாஜி 
ஷங்கர்இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி: த பாஸ்...80 களில் வந்த ரஜினியை அப்படியே இளமையாக காட்டினார் ஷங்கர்.வெள்ளைக்காரன்  மாதிரி  வந்து  கலக்கினர். பிடித்த காட்சி, வில்லன்  ஆதி  ஜெயிலுக்கு  போகும்  போது  ரஜினி  பேசும்  அந்த  வசனம் சூப்பரா இருக்கும். கிளைமேக்ஸில் மொட்டை பாஸ் வருவார். எப்போதும் ரஜினி படத்தில் எதாவது ஒரு டுவிஸ்ட் இருக்கும்... 


3 : எந்திரன்.
ரஜினி ரசிகர்கள் முதல் அனைத்து சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்த திரைப்படம். எப்போதும் போல ரஜினிக்கு ஓபன் சாங் இல்லை ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் மற்ற அனைவருக்கும் பிடித்த படம் . ரஜினி மாதிரியே ரோபோ நடந்து வரும்...அது எனக்கு பிடித்தகாட்சி 

2 : படிக்காதவன் 
அண்ணன் தம்பி கதை சிவாஜி அண்ணன் ரஜினி தம்பி. அண்ணி கொடுமை தாங்காமல், அண்ணனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்பதற்காக வீட்டை வீடு வெளியேறுவார் ரஜினி. தன் தம்பியை படிக்க வைத்து தான் படிகாதவனாய்..! பிடித்த காட்சி அம்பிகா கர்ப்பமா இருப்பதாக நினைத்து தன் காரில் ஏற்றுவார் வண்டி போகாது மறு நாள் பார்த்தா அம்பிகா கர்ப்பமா இருக்க மாட்டார் அதற்க்கு மறு நாள் கர்பமா இருப்பார் அந்த காட்சியில் ரஜினி குழப்பமா இருப்பார் அந்த காட்சி நன்றாக இருக்கும் இப்போதும் அந்த காட்சியை பார்த்தாலும் அந்த காட்சியை ரசித்து சிரிக்கலாம் 


1 பாட்ஷா   
பாட்ஷா  போல எத்தனையோ படம் எடுத்தாலும் இந்த படத்தை போல வேறு எந்த படமும் வெற்றி பெற வில்லை ஆனந்தராஜ் ரஜினியை போட்டு அடிப்பார் "என்னடா" ரஜினி அடி வாங்குகிறார் என்று இருந்தால் அடுத்த காட்சியில் ரஜினி அடிப்பார் அந்த காட்சியில் ரஜினி அவர் தம்பியை "உள்ளே போ" என்று சொல்வார் இன்னும் அந்த வசனம் எனக்கு கேட்டு கொண்டு இருக்கிறது சண்டை முடிந்த உடன் அவர் வயிற்றில்  இடைவேளை என்று போடுவார்கள் இன்னும் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் பாட்ஷா மாதிரி எத்தனை படம் வந்தாலும் ஒரே ஒரு பாட்ஷா தான். பாட்ஷா பார்ட் II விரைவில்...! எப்போதும் ரஜினி படம் என்றால் பாட்ஷா தான் முதலிடம்

Friday, July 20, 2012

surya best 10

 courtesy: harry potter
 தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் தோல்விகளோடு தொடங்கினாலும் திடீர் என அவரது வெற்றி டாப் கியருடன் எகிறியது. அங்கிருந்து அனுபவ இயக்குனர்களோடு இணைந்து பல வெற்றி படங்களை மக்கள் ரசனைக்கு ஏற்ப அளித்து வந்தார்.. இவரது படங்கள் என்றால் எந்த வித பாரபட்சமும் இல்லாமல் ரஜினி, கமல், விஜய், அஜித் ரசிகர்கள் என எல்லாரும் ரசித்தனர். அதையும் தாண்டி அவருக்கும் ரசிகர்கள் சேர்ந்தபடியால் அவரது வெற்றி GRAPH ஏகத்துக்கும் எகிறியது.

 சும்மா இருந்தவர்களை சீண்டி விட்டது போல அகில இந்திய சினிமாவிற்கே சவால் விட்டு இறங்கியது 7ஆம் அறிவு. எதிர்பார்ப்போடு ஒப்பிடுகையில்

Thursday, July 19, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீ்க்கிங்-4


1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.  


நான் பார்த்த சினிமாக்கள்!

டஙகள் பார்த்தே நான் நடிக்க வந்தேனோ, என்னவோ...

அவ்வளவு படம் பார்ப்பேன். அதுவும் பார்க்க வேண்டிய நேரத்தில் இல்ல, படிக்கப் போற நேரத்தில். படிக்கிற காலத்தில் பணம் கிடைப்பது கஷ்டம்தான். ஆனா எனக்குப் படம் பார்க்காம இருப்பது அதைவிடக் கஷ்டம்!

படம் பார்ப்பதற்காகப் பொய் சொல்லவும் தயார். ஏன், திருடவும் கூடத் தயார்தான்! வீட்டில கேட்டா அனுப்ப மாட்டாங்க- அதுவும் நான் விரும்பிக் கேட்கிற படத்துக்கு. ஏதாவது ஒரு படம் நூறு நாளைத் தாண்டி ஓடினால், அதுவும் புராணப் படமாக இருந்தால் குடும்பத்தோட நாய்க்குட்டி சகிதமாய்ப் போய்ப் பார்க்கணும். ஹோ.... படா பேஜார்!

என் இஷ்டத்துக்குப் படம் பார்க்கணும்- அவ்வளவுதான்! ஆனா பணம்..? என்னா பெருசு, சேர்த்துக்க வேண்டியதுதானே..? கடை வைச்சிருந்தாங்க எங்க வீட்டிலேயே. அதுதான் எனக்கு அக்கவுண்ட் இருக்கிற பேங்க்... ஆனா, யாருக்கும் தெரியாம பணம் ‘டிரா’ பண்ணனும். அதில எல்லாம் நான் கில்லாடி! பணம் கைக்கு வந்துடும்.

நேரம்..? ஸ்கூலுக்கு ‘கட்’!

வாத்தியாருக்கு லீவ் லெட்டர்- எங்க அப்பா எழுதின மாதிரி. லெஃப்ட் ஹேண்டால அவுங்க கையெழுத்து.

ருநாள் என் அண்ணன் கிட்டே மாட்டிக்கிட்டேன் தியேட்டர்லே. விழுந்தது அடிகள். என் வலது முழங்கையில இப்பவும் அந்த அடிகள் தந்த தழும்பு அடையாளத்தைப் பார்க்கலாம்.

அதுக்குப் பிறகு நான் படம் பார்ப்பது பாதி பாதிதான். இப்பவும் அப்படித்தான். ஸ்டார்ட் ஆன பிறகு போறேன். முடியறதுக்கு முன்னாலேயே வந்துடுறேன். அப்ப வீட்டுக்கு லேட்டா போனா, படம் பார்த்தது தெரிஞ்சு போகும்னு பயம். இப்ப ஜனங்கள் பார்ப்பாங்கன்னு பயம்!

ரு கன்னடப் படம் பார்க்க சைக்கிளில் போய், முடியறதுக்கு அரை மணி நேரத்துக்கு முன்னாலேயே புறப்பட்டுப் போக என் சைக்கிள வந்து பார்த்தேன். சைககிள் இருக்கு - டைனமோ இல்லே. யாரோ அடிச்சிட்டுப் போயிட்டாங்க. அங்க சண்டை போடவும் நேரமில்லே. கம்ப்ளைண்ட் பண்ணவும் முடியல. வீட்டில டைனமோ எங்கேன்னு கேட்பாங்களேன்னு பயம். லைட் இல்லாம சந்து பொந்தெல்லாம் நுழைந்து, போலீஸை ஏமாற்றி வீடு வந்து சேர்ந்தேன்.

ஆனா, வீட்டிலே என்ன சொல்றது..? ஒரு ஐடியா தோணிச்சு. சைக்கிளை வீட்டு வாசலுக்கு முன்னால நிக்க வைச்சேன். ஒரு கல்லை எடுத்து உள்ளே இருக்கிறவங்களுக்கு நல்லாக் கேட்கிற மாதிரி ஜோரா சைக்கிள் மேலே வீசி அடிச்சேன். ‘டக்...!’
என்னமோ ஏதோன்னு ஓடி வந்தாங்க. நான் ஓரமா மறைஞ்சிக்கிட்டேன். சைக்கிளைப் பார்த்தாங்க. டைனமோ இல்ல! அவங்களே முடிவு பண்ணிட்டாங்க- கேட்ட ‘டக்’ சத்தம் யாரோ டைனமோவை எடுத்த சத்தம்ன்னு!
பரவாயில்லை... என் மூளையும் அப்போ நல்லாவே வேலை செய்தது. ஆனா, இதுபோல எல்லொருக்கும் மூளை வேலை செய்யும்னு அப்பத் தெரியல. அந்த நிகழ்ச்சி....!
து ஒரு டூரிங் டாக்கீஸ். பேரு ‘பசவேஸ்வரா’. ‌தரை நாலணா, பெஞ்சு பன்னிரெண்டனா- Entrace Fees. இருக்கிற டெண்ட்டும் பழசு, ஓடற படங்களும் பழசு.

எனக்கு ரொம்ப செளகரியம். நாலு மாதத்துக்கு ஒரு வாட்டி கேம்ப் போடுவாங்க. அங்க வேலை செய்யறவங்கதான் உலகத்திலேயே பெரிய அதிர்ஷ்டசாலிங்கன்னு என் நினைப்பு. காரணம்... அவுங்க டெய்லி படம் பார்க்கிறாங்களே..!

நானும் எங்கப்பாவும் வீட்டுக்கு வெளியேதான் படுக்கிறது. ஒன்பது மணிக்குப் படுப்போம். பத்து மணிக்கு அப்பா குறட்டை அடிப்பாரு. பத்தே கால் மணிக்குப் படம் ஆரம்பமாகும். பத்தரை மணிக்கு நான் எழுந்திருப்பேன். மூணு தலையணை வைச்சிருப்பேன் கைவசம். மனுசன் படுத்திருக்கிற மாதிரி ‌தலையணைகளை வைச்சி பெட்ஷீட்டைப் போர்த்திட்டு - அப்பா தூங்கிட்டாங்கன்னு அறிஞ்சுக்கிட்டு - மழை வராததையும் தெரிஞ்சுக்கிட்ட பிறகு என் கால்கள் டூரிங் டாக்கீஸ் பக்கம் பறந்து ஓடும்- இருட்டுல.

நாலணா கொடுத்துட்டு, யாருக்கும் தெரியாம இப்ப நான் தியேட்டருக்குள்ள நுழையிற மாதிரியே அப்பவும் நுழைவேன். யாராவது பார்த்திடுவாங்கன்னு பயந்து, இப்ப படம் பார்க்கிற மாதிரியே அப்பவும் படத்தைப் பார்ப்பேன். படம் முடியறதுக்கு முன்னாடியே ஓடிடுவேன். படதட்தை விட்டு ஜனங்க ரோட்டில இருக்கும் போது நான் என் படுக்கையில இருப்பேன்..!

இருட்டு! அமைதி... கலகல சப்தம். அப்பா எழுந்திடுச்சிடுவாரு. என் படுக்கைப் பக்கம் பார்ப்பாரு. தலையணை போயி சிவாஜிராவ் அங்கே இருப்பான். இப்படியே நடந்தது பல காலம். எதுக்கும் ஒரு முடிவு வேணுமே...

‘ஜெகதேகவீரனி கதா’ கிளைமேக்ஸ் படு இன்ட்ரஸ்‌டிங்! என்னை மறந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். ‘வணக்கம்’ போட்டதையும் பார்த்திட்டேன். நான் பார்த்த படங்களிலே முதல்ல ‘வணக்கம்’ பாத்து வெளில வந்தேன். லேசா மழை வந்துக்கிட்டு இருக்கு. டெண்ட்டை விட்டுப் பறந்தேன். வீட்டுக்கு வெளியே போயி விழுந்தேன்... பார்த்தேன்!

படுக்கையைக் காணோம்! எல்லாத்தையும் சுருட்டி உள்ளே கொண்டு போயிட்டாங்க- மழை வந்ததுனால. மெதுவா கதவைத் தட்டினேன். தட்டின சப்தம் எனக்கே கேட்கலை. ஆனா... உடனே கதவைத் திறந்தாங்க.

தூங்கிட்டு இருந்த குழந்தைங்க எல்லாரும் எழுந்திருச்சி உட்கார்ந்தாங்க- அடி தாங்காமல் நான் போட்ட சத்தத்திலே! அன்னையிலேருந்து இன்னிக்கி வரைக்கும் நான் வெளியே தூங்கல.
- ரஜினியின் அனுபவங்கள் நிறைவு -

Wednesday, July 18, 2012

Quentin Tarantino was inspired by kamal hassan

பொதுவாகவே பத்மஸ்ரீ கமல்ஹாசன் ஹாலிவுட் படங்களை காப்பியடிக்கிறார் என்றவொரு குற்றச்சாட்டு இருப்பதுண்டு.ஆனால் அது எந்த அளவுக்கு உண்மையென்று ஹாலிவுட் படங்களை மட்டும் தலைமேல் தூக்கி வைத்து ஆடும் தலைகனம் பிடித்த 'அறிவுஜீவி' களுக்கே வெளிச்சம்.அவர்களின் மூக்கு மொன்னையாகும் அளவுக்கு பத்மஸ்ரீ கமலைப்பற்றி ஒரு செய்தி வந்திருக்கிறது.

     கமல் படத்தை தழுவி(காப்பியடித்து)தான் நான் படம் எடுத்தேன் என்று பிரபல ஆங்கில பட இயக்குனர் ஒருவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்" என்பதுதான் அந்த அதிரடி தலைகீழ் செய்தி.அந்த பிரபல ஆங்கில பட இயக்குனர் குவிண்டின் டொரான்டினோ. (Quentin Tarantino)
      
         அவர் தழுவிய கமலின் அந்த படம் - "ஆளவந்தான்". இதை வைத்து Quentin Tarantino எடுத்தது-கொலைவெறியுடன் ஓடிய "Kill Bill"படமேதான்."Kill Bill" படத்தில் வரும் அனிமேஷன் வன்முறை காட்சிகளை ஆளவந்தான் பார்த்து தான் படமெடுத்ததாக கூறி இருக்கிறார் Quentin Tarantino. 

     ஆனால் இதை ஏற்க பல 'ஜீனியஸ்' களின் மனம் மறுத்தாலும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்றுதான்...உலக நாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசனின் சாதனைகளுக்கு முன்னால் இது சர்வ சாதாரணம்...

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்! - 3


1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.


ந்திரப்பா!

ஆளு சிகப்பு. ஒரு முறை பார்த்தா மறுபடியும் பார்க்கணும்னு தோணும். ஒரு தடவை அவரோடப் பேசினா இன்னொரு தடவை பேசணும்னு தோணும். அது என்ன கவர்ச்சியோ தெரியாது..!

ராமகிருஷ்ண பரமஹம்சரோட பக்தர். வயது 48. எனக்கும் அவருக்கும் ஒரு ஆறு வருஷ பந்தம். ஆமா! நான் வேலை செய்யற பஸ்ஸிலேதான் அவரை முதல் தடவையாகப் பார்த்தேன். ரொம்ப எக்கச்சககமான சந்திப்பு!

அவர் ஃபேமிலியோட வந்திருந்தார். டிக்கெட் கேட்டார். டிக்கெட்டைக் கொடுத்து என் தொழிலை ஆரம்பிச்சேன! தெரியுமே, திருடறதுதான்... அவரோ சிரிச்சுக்கிட்டே இருக்காரு. நல்ல மனிதர்னு நினைச்சேன். அவங்க கிட்டயும் டிக்கெட்டை திருப்பி வாங்கிடலாம்னு திட்டம் போட்டேன். எறங்கும்போது அவர்கிட்ட டிக்கெட்டைக் கேட்டேன். முடியாதுன்னு சொல்லலை... சிரிச்சுக்கிட்டே கொடுத்துட்டுப் ‌போனாரு. அப்புறம்தான் தெரிஞ்சுது... அவர் யாருன்னு! அவர்தான் பெங்களூர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்லே அஸிஸ்டெண்ட் சூபர்வைஸர்! அதாவது செக்கிங் அதிகாரி!

செக்கிங் இன்ஸ்பெக்டர் கிட்டயே கை வரிசை! மறுநாள் வழக்கம் போல டிப்போவுக்குப் போனேன். ஒரு செய்தி: ஏ.டி.‌எஸ். சந்திரப்பாவை டியூட்டி முடிச்சிட்டுப் போய்ப் பார்க்கணும்னு! ஒண்ணுமே புரியலை. டியூட்டி முடிச்சிட்டு அவர் ஆபீஸுக்குப் போனேன். உள்ளே போய்ப் பார்த்தா... நான் டிக்கெட்டை திருப்பி வாங்கிய அதே மனிதர்தான் இங்க ஏ.டி.எஸ். சந்திரப்பா!
இப்பவும் சிரிச்சாரு. அதே சிரிப்பு,

Tuesday, July 17, 2012

ஹலோ, ரஜினி ஸ்பீக்கிங்..! - 2


1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன்.


‘அமுதைப் பொழியும் நிலவே’
பாட்டு வந்தா நிறுத்திடுவேன்!


‘‘அமுதைப் பொழியும் நிலவே... நீ அருகில் வராததேனோ...’’

எனக்குப் பிடித்த பாட்டு. எப்ப வந்தாலும் விரும்பிக் கேட்பேன். எந்தப் படத்துப் பாட்டுன்னு எனக்குத் தெரியாது அப்ப. ஆனா அந்தப் பாட்டை அடிக்கடி பாடுகிற ஒரு பொண்ணை மட்டும் எனக்குத் தெரியும். அப்பவும், இப்பவும் அழகான பொண்ணு. தாவணி போட்டிருப்பாள். ரெண்டு சடை! குண்டு முகம்! சிவப்பு நிறம்! உயரம்னு சொல்ற அளவுக்கு உருவம். நெத்தியில பொட்டு, கன்னத்தில் புன்னகை. பேசினா பாடுகிற மாதிரி இருக்கும். பாடினா கேட்கிற மாதிரி இருக்கும்.

ஆமா! இனிமையான குரல். சுவையான பேச்சு. அழகுக்கு ஏற்ற அடக்கமான குணம்.

பேசுவா, சரியாக் கேட்காது. பாடுவா, சரியாப் புரியாது. முகத்தைக் காண்பிப்பாள், சரியா தெரியாது. அவ்வளவு நளினம். அதுக்குத்தானோ பெயர் பெண்மை! (சில பெண்களைப் பார்த்தா அப்படித்தான். கையெடுத்துக் கும்பிடணும்னு தோணும். சில பெண்களைப் பார்த்தா..?) ஆமா! மறந்துட்டேன். அது என் உறவுக்காரப் பொண்ணு.

பலவாட்டி, பல பேர் அந்தப் பொண்ணுகிட்ட சொல்றதைக் கேள்விப் பட்டிருக்கேன். ‘‘உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவன் அதிர்ஷ்டசாலி’’ன்னு.

எங்க அண்ணிக்கு ஆசையாம்- அந்தப் பொண்ணை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு. எனக்குத் தெரியாது.
ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டுக்கு படிக்க மெட்ராஸ் புறப்படும் போது என்னை வாழ்த்தி அனுப்பினாள். அடடா! இன்னும் கண்ணு முன்னாலேயே இருக்கு. குண்டு முகம்! ரெண்டு சடை! சிகப்பு நிறம்1 நெத்தியில பொட்டு! கன்னத்தில புன்னகை! அதே பார்வை.

மூணு மாதம் கழிச்சிப் பெங்களூர் போனேன். அவங்க அப்பாவுககு டிரான்ஸ்ஃபர் வந்து மைசூர் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. மெட்ராஸ் வந்து ஆறு மாதம் கழிச்சிப் போனேன். ‘அந்தப் பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிறியா’ன்னு வீட்டுல கேட்டாங்க. ‘முடியாது’ன்னு சொன்னேன். நான் அந்தப் பொண்ணை பொண்டாட்டியா பார்த்ததும் இல்ல, நினைச்‌சதும் இல்ல. வீட்டில சொன்னாங்க... அவ நினைச்சிருக்காளாம். நான் நினைக்கலியே..?

மெட்ராஸ் வந்து ஒன்பது மாதம் கழிச்சிப் போனேன். அந்தப் பொண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஆனா எங்கேயோ ஒரு மூலையில லேசா குத்துகிற மாதிரி இருந்தது. ஏன்னு எனக்கே தெரியாது.

மூணு வருஷம் கழிச்சி, மைசூர் பிரிமியர் ஸ்டுடியோவுக்கு ஒரு கன்னடப் பட ஷுட்டிங்குக்குப் போயிருந்தேன். ஓட்டல் சுஜாதாவில என் ரூமுக்கு போன் வந்தது. பேசினேன் - ஒரு பெண் குரல். எங்கேயோ கேட்ட குரல். எப்பவோ எங்கேயோ அடிக்கடி கேட்ட குரல். ஆமா... அந்தப் பொண்ணு குரல்தான். ‘‘உங்களைப் பார்க்க வர்றோம்’’ன்னு சொன்னாங்க. சந்தோஷமா வரச் சொன்னேன்.

கதவைத் தட்டுகிற சப்தம். திறந்தேன். ஒரு ஆண், கூட ஒரு அம்மா, இடுப்பில ஒரு குழந்தை, கையில ஒரு குழந்தை. இன்னொரு குழந்தை எங்கேயோ ஓடிச்சி. அவரு குழந்தையைப் பிடிக்க ஓடினாரு. அந்தப் பொண்ணு உருவம் மட்டும் என் முன்னால.. அதே பொண்ணு!

பார்த்தேன், ஸ்தம்பித்து நின்னேன். குண்டு முகம் நீளமாயிருக்கு. இரண்டு சடை ஒண்ணா இருக்கு. பொட்டு மாறி குங்குமம் வந்து அதுவும் கலங்கி இருக்கு. தாவணி போயி புடவை வந்திருக்கு. நான் பார்த்த குழந்தை தாயா இருக்கா. அவள் பார்த்த சிவாஜிராவ், ரஜினிகாந்த்தாயிருக்கான்! அதே பார்வை, ஆனால் அந்த அழகு இல்லை. அதே புன்னகை, ஆனா அந்தக் கவர்ச்சி இல்லை. அந்த ரெண்டு பிரகாசமான கண்கள் ஒளி குறைந்து என்னைக் குற்றவாளின்னு சொல்ற மாதிரி இருக்கு. நான் குற்றவாளின்னு நெஞ்சில குத்தற மாதிரி இருக்கு.

திரும்பிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்- என் வாழ்க்கையை. எவ்வளவு நேரம் அப்படியே நின்னேன்னு எனக்கே தெரியாது. குழந்தை அழற சப்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு குரல் கேட்டது. ‘‘என் பெயர் கணேஷ்... இவளோட புருஷன்...’’

பல பேர் சொன்னாங்களே... ‘அவளைக் கட்டிக்கப் போறவன் அதிர்ஷ்டசாலி’ன்னு. பார்த்தேன், அந்த அதிர்ஷ்டசாலியை. உன்னைக் கட்டிக்கிறவன் அதிர்ஷ்டசாலின்னு அவகிட்ட சொன்னாங்களே ஒழிய, அதிர்ஷ்டசாலியை நீ கட்டிக்கப் போறேன்னு அவங்க சொல்லல..!

‘அமுதைப் ப‌ொழியும் நிலவே!’ இப்ப அந்தப் பாட்டு ரேடியோவில வந்தா கேட்க மாட்டேன். உடனே நிறுத்திடுவேன்.

Monday, July 16, 2012

ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!

courtesy : bala ganesh


லைப்பைப் படிச்சதும் எங்க ‘ரஜினியும், நானும்’ன்னு எழுதி, சூப்பர்ஸ்டாரும் என் நண்பர்ன்னு சொல்லிடுவேனோன்னு பயந்துட்டீங்கதானே...! இல்லீங்க. அதுல ஒரு விஷயம் என்னன்னா... ரஜினிகாந்த்தை எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும். ஆனா பாவம்... அவருக்குத் தான் என்னைத் தெரியாது. ஹி... ஹி....

1978-79கள்ல ‘இதயம் பேசுகிறது’ இதழில் அப்ப வளர்ந்துக்கிட்டு வந்த ஹீரோவான ‘ரஜினிகாந்த்’திடம் தொடர் பேட்டி எடுத்து ‘ஹலோ... ரஜினி ஸ்பீக்கிங்!’ அப்படிஙகற தலைப்பில சில வாரங்கள் வெளியிட்டாங்க. அதில் சில பகுதிகள் என்னிடம் இருக்கிறது. ‘சிவமகன்’ங்கிறவரு ரஜினி ஸார் பேசற மாதிரியான நடையிலயே அதை எழுதியிருக்காரு. அதுல இருந்து ஒரு பகுதியை இங்க உங்களோட பகிர்ந்துக்கறேன். உங்களுக்கு ரஜினியைப் பிடிக்கும், தொடர்ந்து படிக்க விருப்பம்னா இன்னும் சில பகுதிகள் வெளியிட உத்தேசம்!

இப்போ... உங்ககூட இன்றைய சூப்பர் ஸ்டாரான அன்றைய ரஜினிகாந்த் பேசுகிறார்:

நான் முதன்முதலா நடிச்ச ‘அபூர்வ ராகங்கள்’ படம் ஒரு வருஷம், ஒண்ணரை வருஷம் கழிச்சுத்தான் ‌பெங்களூர் பக்கம் வரும். நண்பர்கள்கிட்ட கொஞ்சம் ‘ரீல்’ விடலாம்னு நினைச்சேன்.

எனக்கு ஒரு கெட்ட பழக்கம். தெரிந்த விஷயத்தைக் கொஞ்சம் எக்ஸாஜரேட் பண்ணிச் சொல்லுவது. எதுக்குன்னா Only to attract, not to cheat them.

‘‘படத்தில் முதல்ல இருந்து கடைசி வரை நான்தான் First Hero’’ன்னு அங்க உள்ளவங்களை ‘ப்ளீஸ்’ பண்ணுவதற்காகச் ‌சொன்னேன். என்னுடைய துரதிர்ஷ்டம், ‘அபூர்வ ராகங்கள்’ படத்தை சீக்கிரமா ரிலீஸ் பண்ணிட்டாங்க. நண்பர்களுக்கு ஆர்வம், பரபரப்பு! ‌எனக்கோ பயம், தர்ம சங்கடம்!

என்னை வரவேற்க ஏற்பாடுகள் நடந்தது. எப்படி? பலூன்களோட... மிட்டாய்களோட...

திரைப்பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒண்ணா, ரெண்டா... நாலு டிசைன்ஸ்! ஒரு டிசைன்லகூட என் படம் இல்லை. சொல்லியிருக்கிறதோ மெயின் ரோலு - போஸ்டரிலோ முகம் இல்லை. அங்க மறுபடி ஒரு ‘ரீல்’ விட்டேன். ‘‘நட்சத்திரம்னாதான் போஸ்டர்ல போடுவாங்க. புதுமுகத்தை எப்படிப் போடுவாங்க?’’ -அப்படி ஒரு சமாளிப்பு.

ரிலீஸ் தேதி வந்தது. தியேட்டருக்குப் போனாங்க. அங்க வைச்சிருக்கிற போட்டோ கார்டில தேடினாங்க. ஒரே ஒரு போட்டோவில்தான் நான் இருந்தேன்- அதுவும் அவங்க கண்ணில படலை. தியேட்டரில் உட்கார்ந்தாங்க. எப்படி..? பலூனை ஊதிக் கையில வைச்சிக்கிட்டு... நான் திரையில் வந்தவுடன் அதை அடிச்சி, உடைச்சி என்னை வரவேற்க! முதலிலேயே ஸ்வீட் கொடுக்கப்பட்டு விட்டது- பால்கனியில இருககிறவங்களுக்கு. என்னன்னு சொல்லிக்கிட்டு..? ‘‘இந்தப் படத்தில் வர்ற ஹீரோ நம்ம ஃபிரண்டுதான்’’னு...!


படம் ஆரம்பமானது. ‘சிவாஜிராவைக் காணுமே...?’ டைட்டிலில் தேடுறாங்க. அங்க ரஜினிகாந்த்துன்னு இருக்கிறது அவங்களுக்குத் தெரியாது. ‘வருவான், வருவான்’னு எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க- அடிக்கிறதுக்கு. (பலூனை!)

படம் ஓடிக்கிட்டே இருக்கு. பலூன் காத்தும் போயிகிட்டே இருக்கு. நான் திரையில் வரவே இல்லை. இன்டர்வல் வந்திடுச்சி. வெளியே வந்தாங்க. நான் அப்ப அங்கே இல்லே. பெல் அடிச்சது. உள்ளே போனாங்க. திட்டவட்டமான முடிவு பண்ணிட்டாங்க- ‘நான் படத்திலே இல்‌லே’ன்னு! ஆனா படம் நல்லா இருக்கு, பாத்திட்டுப் ‌போகலாம்னு உட்கார்ந்தாங்க. இப்ப காத்துப் போன பலூன் ஜோபியில இருக்கு. நான் ‘ரீல்’ விட்டது தெரிஞ்சு போச்சு.

இன்டர்வெல் முடிந்து படம் ஆரம்பமானது. அப்போது திரையில்... இரண்டு கேட்டையும் தள்‌ளித் திறந்து்கிட்டு ஒருவன் வந்து நின்னான்.ந லோ ஆங்கிளில் ஷாட் (Low Angle Shot). எல்லாரும் நிமிர்ந்து உட்கார்ந்தாங்க. எங்கோ பார்த்த முகம் மாதிரி இருந்தது அவங்களுக்கு. கொஞ்சம் நேரம் கழிஞ்ச பிறகு அந்த மனிதன்தான் நான்னு தெரிஞ்சது. எடுத்தாங்க ஜோபில இருந்த பலூனை... ஊதினாங்க காத்தை... அடிச்சாங்க பலூனை..! ‘டப்... டப்... டப்...’

அப்ப திரையில கமலஹாசன் முகம் வந்திருந்தது. கமலோட வரவுக்குக் காத்திரந்து சரியாக, அவுங்க அடிச்சது போல் இருந்தது. எல்லாருக்கும் ஆச்சரியம்... ‘என்னடா கமலஹாசனுக்கு இப்ப பலூனை உடைச்சி வரவேற்கறாங்களே’ன்னு..! அவுங்களுக்கு எப்படித் தெரியும்... எனக்காக அடிச்சாங்கன்னு!

படம் முடிஞ்சது. வீட்டுக்கு வந்தாங்க- என்னை அடிக்க! நான் அங்க இல்லே... ரயில்வே ஸ்டேஷனில் இருந்தேன்- மெட்ராஸுக்கு வருவதற்கு!

Tuesday, June 26, 2012

BOOK REVIEW - CINEMA VIYABARAM

This book was written by sankara narayanan actor,writter,dialogue writter,distributor & short film director.
In tamil websites he was the king called  cable sankar .Now let us come to review  of the book.

 Book consists of 15 interesting topics. As a reader i reviews,from statring page  itself book created interest to read further pages.The distributor role was not totally known for the cinema fans ,visible only for the cinema peoples.
The writer tolally discussed all the roles of distributor in the cinema.

Book totally  discuss about the cinema business of kollywood ,bollywood & hollywood.
And clearly says about the unexpected hits like sethu, kadhal kottai  etc,explains also the unexpected flops.
The super six of hollywood (warner,20th century,disney ,etc)business rules and their making and how they marketing the films was  said superbly. 

 Finally the book touches lot of behind screen  business style.And deals of distributor vs producer and distributor vs theatre owners.
Hatsoff to cable sankar because he says the detailed business in easy way like my review.
Another important thing books tells that film gaining  business in TV ,Online,etc after  thearterical release.

I received this book from the writer sankar narayanan with his autograph,in chennai youth blogspot meet,at discovery book palace.
 

Sunday, June 24, 2012

விஜய் அவார்ட்ஸ் 2011 - FULL REPORT

courtesy:harrypotter

ஆரம்ப காலத்தில் FILMFARE AWARDS  என்றால் நடிகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரு எதிர் பார்ப்பு இருக்கும். ஆனால் அப்பிடியான சில விருதுகளை பின்னுக்கு தள்ளி விட்டு இப்போது  தமிழ் சினிமாவின் முக்கிய விருதாக மாறி இருக்கிறது விஜய் அவார்ட்ஸ்.



ஆறாவது விஜய் விருதுகள் கடந்த ஜூன் 16 அன்று ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 2011 ல் வெளியான 143 தமிழ் படங்களில் 34 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.

விஜய் விருதுகளுக்கான ஜூரிகளாக இயக்குனர் KS ரவிக்குமார், ஒளிப்பதிவாளர் 
ரத்தினவேல், யூகி சேது, நதியா மற்றும் லிஷி ப்ரியதர்ஷன் போன்றோர் அங்கம் வகித்தனர். வழமை போல் நிகழ்ச்சியை சிவா மற்றும் கோபி தொகுத்து வழங்கினர்.

இனி விருதுகள் யார் யார் பெற்றார்கள் என்று பார்க்கலாம்.

சிறந்த திரைப்படம் - எங்கேயும் எப்போதும்
 
சிறந்த இயக்குநர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)

 சிறந்த நடிகர்

    
விக்ரம் - தெய்வ திருமகள் 

  •         தனுஷ் - ஆடுகளம் 
  •         ஜீவா - கோ
  •         சூர்யா - 7ஆம் அறிவு 
  •         விஷால் - அவன் இவன் 



சிறந்த நடிகை
    
அஞ்சலி -
எங்கேயும் எப்போதும்

  •         ஷெட்டி அனுஷ்கா - தெய்வ திருமகள்
  •         இனியா - வாகை சூட வா
  •         நித்யா மேனன் - 180
  •         ரிச்சா கோபாத்யா - மயக்கம் என்ன 

சிறந்த துணை நடிகர்

    ஆர் சரத் குமார் - காஞ்சனா 


சிறந்த துணை நடிகை
    
உமா ரியாஸ் கான் - மௌன குரு

  •         அனன்யா - எங்கேயும் எப்போதும்
  •         லக்ஸ்மி ராமகிருஷ்ணன் - யுத்தம் செய்
  •         பியா - கோ
  •         வசுந்தரா - போராளி 

சிறந்த நகைச்சுவை நடிகர்

    
சந்தானம் - சிறுத்தை

  •         கோவை சரளா - காஞ்சனா
  •         வடிவேலு
  •         விவேக்




சிறந்த வில்லன்
    
அஜித் குமார் - மங்காத்தா 

  •         ஜாக்கி ஷெராப் - ஆரண்ய காண்டம் 
  •         ஜெயபாலன்  - ஆடுகளம்
  •         ஜான் விஜய் - மௌன குரு
  •         ஜானி திரி  - 7ஆம் அறிவு 

சிறந்த அறிமுக நடிகர்

    நானி - வெப்பம் 

 சிறந்த அறிமுக நடிகை
    
ரிச்சா கோபாத்யா - மயக்கம் என்ன 


 சிறந்த இசையமைப்பாளர்
    
ஜி வி பிரகாஷ் குமார் -
ஆடுகளம்
  •         ஹாரிஸ் ஜெயராஜ் - கோ
  •         ஹாரிஸ் ஜெயராஜ் - எங்கேயும் காதல்
  •         யுவன் ஷங்கர் ராஜா - மங்காத்தா 
  •         ஜி வி பிரகாஷ் குமார் - மயக்கம் என்ன 

சிறந்த ஒளிப்பதிவாளர்

    
பி எஸ் வினோத் -
ஆரண்ய காண்டம்
  •         ஓம் பிரகாஷ் - வாகை சூட வா
  •         நீரவ் ஷா - தெய்வ திருமகள்
  •         ரவி கே சந்திரன் - 7ஆம் அறிவு 
  •         வேல்ராஜ் - ஆடுகளம்

சிறந்த எடிட்டர்

    கிஷோர் கூட. - எங்கேயும் எப்பொதும் 
  •         அந்தோணி - கோ
  •         பிரவீண் கே எல் பி & என் ஸ்ரீகாந்த் - ஆரண்ய காண்டம்
  •         ராஜா முஹம்மது - மௌன குரு
  •         ககின்  - யுத்தம் செய்

சிறந்த கலை இயக்குநர்
    
சீனு -
வாகை சூட வா
  •          - ஆடுகளம்
  •         விதேஷ்  - ஆரண்ய காண்டம்
  •         கதிர்  - பயணம்
  •         - 7aum Arivu

சிறந்த பின்னணி பாடகர்

    எஸ் பி பாலசுப்ரமணியம்  - "அய்யயோ" (ஆடுகளம்)
  •         ஆலப்  ராஜு - "என்னமோ ஏதோ" (கோ)
  •         ஹரி சரண் - "ஆரிரோ" (தெய்வ திருமகள்)
  •         கார்த்திக் - "திமு திமு" (எங்கேயும் காதல்)
  •         வேல்முருகன் - "ஒத்த சொலால " (ஆடுகளம்)





 சிறந்த பெண் பின்னணி பாடகர்
   
சின்மயி  - "சாரா சாரா" (வாகை சூட வா
)
  •         பிரசாந்தினி - "அய்யயோ" (ஆடுகளம்)
  •         சைந்தவி - "பிறை தேடும் " (மயக்கம் என்ன)
  •         சுசான் D'மெல்லோ - "மழை வரும் " (Veppam)
  •         ஸ்வேதா மோகன் - "இல்லை கோரினால்" (180)

சிறந்த பாடலாசிரியர்

    வைரமுத்து - வாகை சூட வா


 சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்

   
தியாகராஜன் குமார ராஜா  - ஆரண்ய காண்டம்




சிறந்த பின்னணி இசை

    
யுவன் ஷங்கர் ராஜா -
ஆரண்ய காண்டம்
  •         எம் கிப்ரான் - வாகை சூட வா
  •         ஜி வி பிரகாஷ் குமார் - தெய்வ திருமகள்
  •         கே - யுத்தம் செய்
  •         ஹாரிஸ் ஜெயராஜ் - கோ

சிறந்த உரையாடல்

   
சமுத்திரகனி 
- போராளி 
  •         வெற்றிமாறன்  - ஆடுகளம்
  •         குள்ளநரி கூட் டம் 
  •         பயணம்
  •         ஆர் முருகதாஸ் - 7ஆம் அறிவு 

சிறந்த நடன
இயக்குனர்

    
கே
சுசித்ரா - அவன் இவன்  (தியா தியா டோல்)
  •         - எங்கேயும் எப்போதும்  (மாசமா)
  •         தினேஷ் - ஆடுகளம் (ஒத்த சொலால)
  •         - மயக்கம் என்ன (காதல் என்)
  •         - எங்கேயும் காதல் (நங்கை)

சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்

    
திலீப் சுப்பராயன்  -
ஆரண்ய காண்டம்
  •         - ரௌத்திரம் 
  •         - 7ஆம் அறிவு 
  •         - ஆடுகளம்
  •         சில்வா - மங்காத்தா 
  •         ஹாரி பாட்டர் 


சிறந்த
மேக் அப்

   
கோதண்டபாணி  - 7ஆம் அறிவு
  •         - அவன் இவன்
  •         - ஆரண்ய காண்டம்
  •         - வாகை சூட வா
  •         - எங்கேயும் எப்போதும்

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்

   
அனுவர்தன்  & மூர்த்தி - 7ஆம் அறிவு
  •         - எங்கேயும் காதல்
  •         - கோ
  •         - வாகை சூட வா
  •         வாசுகி பாஸ்கர் - மங்காத்தா

சிறந்த கண்டுபிடிப்பு

    வாகை சூட வா - எம் ஜிப்ரான் 

சிறந்த குழு 
   
ஆடுகளம்

விருப்ப விருதுகள்
 
பிடித்த ஹீரோ


     அஜித் குமார் -
மங்காத்தா

         தனுஷ் -
ஆடுகளம்
         சூர்யா -
7ஆம் அறிவு
         விக்ரம் -
தெய்வ திருமகள்
         விஜய் -
வேலாயுதம்  
பிடித்த ஹீரோயின்

     அசின் -
காவலன்

         அனுஷ்கா ஷெட்டி -
தெய்வ திருமகள்
         ஹன்சிகா மோட்வானி -
எங்கேயும் காதல்
        
டாப்சி - ஆடுகளம்
         திரிஷா கிருஷ்ணன் -
மங்காத்தா

பிடித்த திரைப்படங்கள்  

     கோ - ஆர் எஸ் இன்போடெயின்மென்ட்

        
மங்காத்தா - கிளவுட் நைன் திரைப்படங்கள்
         சிறுத்தை - ஸ்டுடியோ கிரீன்
        
வேலாயுதம் - ஆஸ்கார் பிலிம்ஸ்
        
7ஆம் அறிவு - ரெட் ஜெயண்ட் திரைப்படங்கள் 
பிடித்த இயக்குநர்

     வெங்கட் பிரபு -
மங்காத்தா

         ஆர் முருகதாஸ் -
7ஆம் அறிவு
         கே வி ஆனந்த் - கோ
         செல்வராகவன் - 
மயக்கம் என்ன 
         வெற்றிமாறன் -
ஆடுகளம்

பிடித்த பாடல்

     "
என்னமோ ஏதோ" - கோ
         "காதல் என் காதல்" -
மயக்கம் என்ன
         "
கலாசலா " - ஒஸ்தி
         "
ஒத்த சொலால " - ஆடுகளம்
         "
விளையாடு மங்காத்தா" - மங்காத்தா



ஆண்டின் சிறந்த என்டர்டைய்னர்

     தனுஷ்

Tuesday, June 19, 2012

கமல் அசத்திய 10 படங்கள்: சிறப்பு பதிவு


i nearly take 3 days to post this one...... special courtesy:mohan kumar 

***** 
களத்தூர் கண்ணம்மாவில் 1960-ல் அறிமுகம் ஆன கமல் அடுத்த மூன்று வருடங்களில் ஐந்து படங்களில் மட்டும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் . பின் ஏழு வருடங்கள் கழித்து 1970-ல் ஜெய்சங்கர் நடித்த மாணவனில் ஒரு பாட்டுக்கு ஆடியவர்,   1973  முதல் (அரங்கேற்றம்) -  இன்று வரை தொடர்ந்து நடித்து கொண்டுள்ளார். இதில் குறிப்பிட்ட பத்து படங்களை பட்டியலிடுவது சற்று சிரமான காரியம் தான்.
இந்த படங்கள் நடிப்புக்காக மட்டுமல்லாது இன்னும் பல காரணங்களால் பலரது நெஞ்சில் நிற்பவை. 

1. சலங்கை ஒலி (சாகர சங்கமம்) 

கமலின் படங்களில் எனது All time favourite.  இந்த படத்திற்கு பின் தான் கமலை ரசிக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே வயதான கமல் ஷைலஜாவிற்கு அத்தனை வகை நடனங்களையும் ஆடி காட்டுவார்.. அதில் துவங்கி கமலின் கேரக்டர் மீதான பிரமிப்பு கடைசி காட்சி வரை நீடிக்கும். ஒரு காட்சியில் கமல் வழக்கம் போல் குடித்து விட்டு, தான் தங்கியிருக்கும் நண்பன் சரத் பாபு வீட்டுக்கு வருவார். கிருஷ்ண ஜெயந்தி என வாசலிலிருந்து கிருஷ்ணர் கால் வரைந்திருக்க,  உள்ளே வர மனம் இன்றி வாசலிலேயே அமர்ந்து விடுவார். அழகான காட்சி இது. போலவே எத்தனை முறை பார்த்தாலும் " தகிட ததிமி" பாடலில் ஜெய பிரதா நெற்றியில் குங்குமம் வைக்கும் காட்சி.. கிளாசிக்.  
2. நாயகன்
கமலின் சிறந்த படங்கள் பட்டியலிடும் எவரும் தவற விட முடியாத படம் . ஒரு மனிதனின் வாழ்க்கையை மிக இளம் வயது முதல் இறப்பு வரை சொன்னது. கமல் வழக்கமான நடிப்பிலிருந்து பெரிதும் வேறு பட்ட நடிப்பை இந்த படத்தில் காணலாம். ஒவ்வொரு வயது மாறும் போதும் கெட் அப் மாற்றி மேனரிசம் மாற்றி அற்புதமாய் நடித்திருப்பார். மணி ரத்னம் இயக்கம் , இளைய ராஜா இசை, PC  ஸ்ரீராம் ஒளிப்பதிவு என அனைத்தும் சேர்ந்து இந்த படத்தை எங்கோ கொண்டு சென்று விட்டது. கமலுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மிக பொருத்தமே. 
படத்தில் எனக்கு பிடித்த காட்சி: இவர் மகன் நிழல்கள் ரவி, இவரை போலவே தாதாவாக மாறும் போது, கமல் அவரிடம் " நாயக்கரே வெத்திலை எடுத்துக்குங்க" என்பார்.  நிழல்கள் ரவி வெட்கத்தோடு வெற்றிலை எடுத்து கொள்வார். திரை கதை, நடிப்பு அனைத்தும் அசத்திய இடம் இது.  
3. அபூர்வ சகோதரர்கள்
ஒரு சிறந்த மசாலா & entertaining படம் என்றால் இதனை சொல்லலாம். அப்பாவை கொன்றவரை பழி வாங்கும் சாதாரண கதை. ஆனால் இது வரை இந்த படத்தை எத்தனை முறை பார்த்திருப்பேன் ( குறைந்தது நான்கு) .. ஆயினும் அலுக்கவே அலுக்காத படம் இது. குள்ள கமலுக்காக எடுத்த முயற்சிகள், உழைப்பு, அந்த கேரக்டரில் தெரிந்த புத்திசாலித்தனம் (நன்கு யோசியுங்கள் : குள்ள கமல் தான் Actual ஹீரோ; இன்னொரு கமல் பெரும்பாலும் பாட்டுக்கு தான் பயன் பட்டிருப்பார்) கிட்ட தட்ட நிறைவு பகுதியில் வந்தாலும் மறக்கவே முடியாத ஜனகராஜ் காமெடி.  கமலின் படங்களில் செமையாய் ஹிட் ஆகி ஓடிய படங்களில் இதுவும் ஒன்று.
4. தேவர் மகன் 
இந்த படத்தை கமலின் நடிப்பு என்பதற்காக இல்லாமல் கமலின் சிறந்த திரைக்கதை, எழுத்தாற்றல் இதற்காக பிடிக்கும். கதையில், அவசியம் இல்லாமல்  எந்த காட்சியும் இருக்காது.  சிவாஜி,  ரேவதி போன்றோர் நடிப்பில் அசத்தினர். கமல் மிக underplay செய்த படம் என சொல்லலாம். வன்முறை வேண்டாம் என வலியுடன் சொன்ன படம்.
5. இந்தியன் 

இந்தியன் தாத்தா ஹீரோ. படத்தில் ரெண்டு ஹீரோயின்களுடன் பெரும்பாலான டூயட் பாடும் சின்ன கமல் தான் வில்லன். இறுதியில் இந்த சின்ன கமலை தந்தையே கொல்கிறார். எத்தனை முரண்கள் பாருங்கள். ஷங்கர் மிக அழகாய் பேக்கேஜ் செய்த படம். கதை, காமெடி, நடிப்பு, பாட்டு என அனைத்தும் சேர்ந்து இப்படி ஒரு படம் அமைவது ரொம்ப கடினம். ஷங்கர் மற்றும் கமல் இருவருக்காகவும் ரசித்த படம் இது. 

6. 16 வயதினிலே 
கமல், ஸ்ரீதேவி ரஜினி மூவரையும் மிக வேறுபட்ட முறையில் பாரதி ராஜா காட்டிய படம். அதிலும் அழகான கமலை எவ்வளவு அசிங்கமாய் காட்டியிருப்பார் !! வெற்றிலை ஒழுகும் வாயும், நடையும், தலை முடியும் இன்னும் மறக்க முடிய வில்லை. பாடல்களும் பின்னணி இசையும் .. ராஜா ராஜா தான்!!
ஆனந்த விகடன் இத்தனை வருட விமர்சனங்களில் இது வரை அதிக மதிப்பெண் தந்தது 16வயதினிலேக்கு தான்; இது வரை எந்த படமும் அதனை முந்த வில்லை. இந்த ஒரு தகவலே போதும் இந்த படம் பற்றி சொல்ல. 
7. மகா நதி 
நிஜத்திற்கு மிக அருகே இருக்கும் ஒரு கதை. யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்கலாம். இன்றும் நடந்து கொண்டு தானிருக்கிறது.  இது தான் இந்த படத்தோடு நம்மை ஒன்ற வைத்தது. 
இந்த படத்தில் அந்த குழந்தைகள் இருவரும் பிரிந்து ஆளுக்கு ஒரு விதமாய் கஷ்ட படுவதும், குறிப்பாய் பெண்ணை மும்பை சிவப்பு விளக்கு பகுதியில் கமல் கண்டெடுத்து கூட்டி வருவதும் நம் மனதில் ஆழமாய் தழும்பை ஏற்படுத்தி போயின. 
" ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் பேரும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே ஏன்" என்ற கமலின் கேள்விக்கு இன்னமும் நம்மிடம் பதில் இல்லை..( படம் வந்து 20 ஆண்டுகள் ஆகிறது!!)
8. பேசும்  படம் 

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய இந்த படம் நிச்சயம் ஒரு மைல் கல் தான். வசனங்களே இன்றி ஒரு படம்!! யப்பா நினைக்கவே ஆச்சரியமாய் இருக்கும் இந்த ஐடியாவை நிஜமாக்க நிறைய தைரியம் வேண்டும். அது இயக்குநர்க்கும் கமலுக்கும் இருந்தது. படத்தில் யாரும் வேண்டுமென்றே  பேசாமல் இருக்க வில்லை. காட்சி அமைப்புகள் அப்படி இருக்கும். சில காட்சிகள் மனிதர்கள் பேசினாலும் அது தூர இருக்கும் ஹீரோவுக்கு கேட்காது. இப்படி போகும் படம். 
அமலா மிக மிக அழகாய் இருந்த காலம் அது. படத்தில் வசனம் தான் இல்லையே ஒழிய சத்தங்கள் நிறைய உண்டு (குறிப்பாய் கமல் குடியிருக்கும் ரூமுக்கு அருகே உள்ள சினிமா தியேட்டர் சத்தம்).  நீங்கள்  இதுவரை பார்க்கா விடில் இந்த கிளாசிக் படத்தை அவசியம் ஒரு முறை பாருங்கள். படம் முழுதும் சிரித்து விட்டு இறுதியில் மனம் கனத்து போகும்.   

9. தசாவதாரம் 

ஒரு முறை பார்த்தால் புரியாத படம். குறைந்தது ரெண்டு முறை பார்த்தால் ஓரளவு புரியும். தனிபட்ட முறையில் எனக்கு கமலை விட அவரது மேக் அப் தான் துருத்தி கொண்டு தெரிந்தது. என்றாலும் கமல் மிக அதிகம் உழைத்த, அதே சமயம் கமர்சியல் வெற்றியும் பெற்ற படம் என்பதால் இந்த லிஸ்டில் சேர்த்துள்ளேன். 

10. அன்பே சிவம் 

இந்த படத்தின் கரு அற்புதம். லியோ டால்ஸ்டாய் சொன்ன மாதிரி " பக்கத்தில் உள்ளவனை நேசி; அது தான் அவசியமானது. மற்றவை எல்லாம் இரண்டாம் பட்சம் தான்" என்பதே இந்த படத்தின் அடி நாதமாயிருந்தது. கமல் விபத்தில் சிக்கி முகம் விகாரமாக காரணமான நாய் மீது கமல் சிறிதும் கோப படாமல் மிகுந்த அன்பு காட்டுவார். கமல் -மாதவன் இடையே நடக்கும் சில உரையாடல்கள் அசத்தும்!  டைட்டிலில் இயக்கம் சுந்தர். சி என போட்டார்கள் :)))

முகத்தை மறைக்கும் கண்ணாடி போட்டாலும் கமல் நடிப்பிலும் திரை
கதையிலும் மனதை நெகிழ்த்தினார். அன்பு தான் கடவுள் என்று சொல்லிய அருமையான படம்.

விடு பட்ட படங்கள் பட்டியலில் குறிப்பிடத்தக்கவை : 

மைக்கேல்  மதன  காமராஜன் 
மூன்றாம் பிறை 
சிப்பிக்குள் முத்து
ஏக் துஜே கேலியே (மரோ சரித்ரா) 
பஞ்சதந்திரம் 

கமலின் எந்த படம் உங்களை ரொம்ப கவர்ந்தது? இந்த பட்டியலில் இருந்தாலும் , இதை தாண்டி இருந்தாலும் பகிருங்கள்!  நன்றி !!