Monday, July 23, 2012

எனக்கு பிடித்த டாப் 10 ரஜினி படங்கள்...

courtesy : rasigan soundarapandian



warrior தேவா ரஜினி படங்களை  பற்றி தொடர் பதிவு எழுத சொன்னார் நான் தீவிர ரஜினி ரசிகன் இல்லை என்றாலும் ரஜினி படங்களை பார்த்து விடுவேன் ஒருதடவை படையப்பா படம் பார்க்க சென்றோம்  ரஜினி படம் பார்க்கப்போனால் டிக்கெட் உடனே கிடைத்து விடுமா என்ன...?  3 மணி ஆட்டத்திற்கு சென்று டிக்கெட் கிடைக்க வில்லை சரி இருந்து 6 மணி ஆட்டம் பார்த்துவிட்டு வந்தோம்..பிறகு  பாபா படம் வந்த மறுநாள் படம் பார்க்க சென்றேன் 300 ரூபாய் கொடுத்து பிளாக்கில் டிக்கெட் வாங்கிப் படம் பார்த்தோம்...என்ன படம் தான் நல்லா இல்லை...!அதில் ரஜினி டான்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கும் இப்போது எந்திரனில் என்னமா டான்ஸ் ஆடுறார்...இதுவரை ரஜினி பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறார் 

10 : நினைத்தாலே இனிக்கும் 
இந்த படத்தில் கமல் கூட நடித்து இருப்பார் MSV குரலில் ரஜினி பாடும் சிவசம்போ பாடல் எனக்கு பிடிக்கும் இதில் டேப் ரெக்கார்டில் ஒரு குரல் வரும் அதை கண்டு பிடிக்க முடியாமல் தவிப்பது..அந்த காட்சிகள் எல்லாம் நன்றாக இருக்கும் ஒரு காட்சியில் ரஜினி சிகிரெட்டை எடுத்து பற்ற வைப்பார் அதே போலே பத்து தடவை செய்யவேண்டும் என்று சொல்வார் பூர்ணம் விஸ்வநாதன், அந்த காட்சிகள் எனக்கு பிடிக்கும் 



9 : ஆறிலிருந்து அறுபது வரை
எதார்த்தமான திரைப்படம் இந்தப்படத்தை ஒரு நாள் டிவியில் பார்த்தேன். ரஜினியின் நடிப்பு அபாரமாக இருந்தது, இந்த கதை எனக்கு ரொம்ப பிடிக்கும், சின்ன வயதில் அப்பா இறந்து விடுவார் ரஜினி தான் குடும்பத்தை காப்பாற்றுவார் தம்பி தங்கையை படிக்க வைத்து நல்ல படியாக வளர்ப்பார் ஆனால் தம்பி தங்கை இவருக்கு உதவி செய்ய மாட்டார்கள். இவர்கள் குடும்பம் கஷ்டப்படும் இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் தாலி பறித்து விடுவார்கள் அப்போது ரஜினி காப்பாற்றி கொடுப்பார் அந்த பெண் வாழ்த்தி "உங்க குடும்பம் நல்லா இருக்கணும்" சொல்வார் ரஜினி வீட்டுக்கு வரும் பொழுது அவர் மனைவி குடிசை தீ  விபத்தில் இறந்து விடுவார் இந்த காட்சி உருக்கமான காட்சி. இப்போது உள்ள மனிதர்களுக்கும் இந்த கதை பொருந்தும்


8 : தில்லு முல்லு 
ரஜினியின் படங்களில் சில இடங்களில் நகைச்சுவை இருக்கும். ஆனால் இந்த படத்தில் முழுவதும் நகைச்சுவை இருக்கும் எனக்கு அந்த இன்டர்வியூ காட்சிகள் பிடிக்கும் இறுதி காட்சியில் கமல் வருவது மேலும் சிறப்பு ...ஒரு பொய் சொன்னால் அதை மறைக்க பல பொய்கள் சொல்ல வேண்டி வரும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருப்பார்கள்...


7 : படையப்பா   
இந்த படத்தில் இவர் ஓபனிங் சீன் ரொம்ப சூப்பரா இருக்கும் ye who are you man ரம்யா கிருஷ்ணன் கேட்க என் பேரு படையப்பா...என்று பாடல் ஆரம்பிக்கும் அந்த காட்சிமுதல் கடைசி காட்சி வரை ரஜினி பட்டையை கிளப்பி இருப்பார் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் படையப்பா தான் மிக பெரிய திருப்பு முனை.. பிடித்த காட்சிகள் ஒரு காட்சியில் சிவாஜி, ரஜினியை கூப்பிட்டு சல்யூட் அடிக்க சொல்வார். ரஜினி சல்யூட் அடித்தவுடன் "யாரு இவன் என் பையன்" என்று சொல்வார்....

6 : பில்லா
இந்த படத்திற்கு முன்பு தான் எம் ஜி ஆர் ரஜினியை கூப்பிட்டு "நீ என்ன சூப்பர் ஸ்டாரா" என்ன கேட்டு மிரட்டியதாக சொன்னார்கள் அதற்க்கு தான் முள்ளும் மலரும் பாடலில் "ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும்" எனக்கு ஒரு கவலை இல்லைஎன்ற பாடல் வைத்தார்.ரஜினி பில்லா படத்திற்கு பிறகே ரஜினி சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து காட்டினார். பிடித்த காட்சிகள் ஓட்டலில் இருந்து ரஜினி தப்பிக்கும் பொழுது நடக்கும் காட்சிகள் பிடிக்கும் ரெண்டாவது ரஜினியின் நடிப்பு பிடிக்கும் இந்த படத்தை எங்க அஜித் நடித்து இருப்பார்  துளி கூட ரஜினியின்சாயல் இல்லாமல். அடுத்து "பில்லா" II வர போகிறது ...   


5 : சந்திரமுகி
பாபா படத்திற்கு பிறகு வந்த படம் "நான் யானை இல்லை குதிரை" என்று சொல்லி அதை செய்து காட்டியவர் ரஜினி. படம் முதல் பாதி காமெடியாக சென்று கொண்டு இருந்தாலும், சந்திரமுகி வந்த பிறகு படம் வேகம் அதிகரிக்கும் வேட்டையன் வந்த பிறகு அட என்னமா வில்லன் கதாபாத்திரம் நடிக்கிறார் ரஜினி இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் வேட்டையன் தான். லக்க லக்க லக்க.... சொல்லும் அந்த காட்சியை ரஜினியே வைத்து இருக்கிறார் விரைவில் "சந்திரமுகி" பார்ட் II வருகிறது 

4 : சிவாஜி 
ஷங்கர்இயக்கத்தில் ரஜினி நடித்த படம் சிவாஜி: த பாஸ்...80 களில் வந்த ரஜினியை அப்படியே இளமையாக காட்டினார் ஷங்கர்.வெள்ளைக்காரன்  மாதிரி  வந்து  கலக்கினர். பிடித்த காட்சி, வில்லன்  ஆதி  ஜெயிலுக்கு  போகும்  போது  ரஜினி  பேசும்  அந்த  வசனம் சூப்பரா இருக்கும். கிளைமேக்ஸில் மொட்டை பாஸ் வருவார். எப்போதும் ரஜினி படத்தில் எதாவது ஒரு டுவிஸ்ட் இருக்கும்... 


3 : எந்திரன்.
ரஜினி ரசிகர்கள் முதல் அனைத்து சினிமா ரசிகர்களும் எதிர்பார்த்த திரைப்படம். எப்போதும் போல ரஜினிக்கு ஓபன் சாங் இல்லை ஒரு சில ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்க வில்லை என்றாலும் மற்ற அனைவருக்கும் பிடித்த படம் . ரஜினி மாதிரியே ரோபோ நடந்து வரும்...அது எனக்கு பிடித்தகாட்சி 

2 : படிக்காதவன் 
அண்ணன் தம்பி கதை சிவாஜி அண்ணன் ரஜினி தம்பி. அண்ணி கொடுமை தாங்காமல், அண்ணனுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என்பதற்காக வீட்டை வீடு வெளியேறுவார் ரஜினி. தன் தம்பியை படிக்க வைத்து தான் படிகாதவனாய்..! பிடித்த காட்சி அம்பிகா கர்ப்பமா இருப்பதாக நினைத்து தன் காரில் ஏற்றுவார் வண்டி போகாது மறு நாள் பார்த்தா அம்பிகா கர்ப்பமா இருக்க மாட்டார் அதற்க்கு மறு நாள் கர்பமா இருப்பார் அந்த காட்சியில் ரஜினி குழப்பமா இருப்பார் அந்த காட்சி நன்றாக இருக்கும் இப்போதும் அந்த காட்சியை பார்த்தாலும் அந்த காட்சியை ரசித்து சிரிக்கலாம் 


1 பாட்ஷா   
பாட்ஷா  போல எத்தனையோ படம் எடுத்தாலும் இந்த படத்தை போல வேறு எந்த படமும் வெற்றி பெற வில்லை ஆனந்தராஜ் ரஜினியை போட்டு அடிப்பார் "என்னடா" ரஜினி அடி வாங்குகிறார் என்று இருந்தால் அடுத்த காட்சியில் ரஜினி அடிப்பார் அந்த காட்சியில் ரஜினி அவர் தம்பியை "உள்ளே போ" என்று சொல்வார் இன்னும் அந்த வசனம் எனக்கு கேட்டு கொண்டு இருக்கிறது சண்டை முடிந்த உடன் அவர் வயிற்றில்  இடைவேளை என்று போடுவார்கள் இன்னும் மறக்க முடியாத காட்சிகள் எல்லாம் பாட்ஷா மாதிரி எத்தனை படம் வந்தாலும் ஒரே ஒரு பாட்ஷா தான். பாட்ஷா பார்ட் II விரைவில்...! எப்போதும் ரஜினி படம் என்றால் பாட்ஷா தான் முதலிடம்

4 comments:

  1. super star rajini

    https://www.youtube.com/edit?o=U&video_id=r0qsZBNxAg8

    ReplyDelete
  2. அருமை https://www.youtube.com/edit?o=U&video_id=DlBzGOrx7HQ

    ReplyDelete
  3. SUPER POST
    https://www.youtube.com/edit?o=U&video_id=rFNnfG-6sjA

    ReplyDelete
  4. usefull post
    https://www.youtube.com/edit?o=U&video_id=-ayAOu1QPnw

    ReplyDelete