Thursday, May 3, 2012

library studies

நூலக படிப்பு


கல்வியில் நாடு தன்னிறைவை அடைய நூலகம் திறப்பது அவசியம் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகின்றன. எனவே  நூலகர்களின்தேவை அதிகரித்து வருகிறது.
இள நிலை படிப்பை முடித்து விட்டு வேறு ஏதாவது படிப்பை மேற்கொள்ள வேண்டும் என யோசிப்பவர்களுக்கு நூலகம் மற்றும் அறிவியல் படிப்பு சற்று மாறுபட்டதாகவே இருக்கும்.
எம் எல் ஐ எஸ் சி எனப்படும் நூலக படிப்பை முடித்தால் நூலகராக  பணியாற்றலாம்.ஏற்கனவே பல பல்கலைக்கழகங்கள் நேரடியாகவும் தொலைநெறியிலும் நூலகம் சார்ந்த இளநிலை,முதுகலை மற்றும் சான்றிதழ் படிப்புகளை அளித்து வருகிறது.குறிப்பாக தொலை நெறியில் படிப்புகளை தேர்வு செய்பவர்கள் நூலக படிப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.இப்படிப்பை முடித்தவர்கள் வேலை வாய்ப்பை பற்றி கவலை கொள்ளத் தேவை இல்லை. அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள்,அரசு நூலகங்களில் வேலை வாய்ப்புகளை பெறலாம்.
பி.எல்.ஐ.எஸ்.சி. படிப்பை மேற்கொள்ள பி.காம், பி.ஏ.பி.எஸ்சி., பி.பி.ஏ. உள்ளிட்ட வற்றில் ஏதேனும் ஒரு முதுநிலை அல்லது ஆசிரியர் படிப்பான பி.எட் முடித்து அதன் பிறகு போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்ட பிறகுதான் வேலைக்குச்செல்ல முடியும்.ஆனால் இந்த படிப்பை முடிக்கும் போதே அதற்கான வேலை வாய்ப்பும் காத்திருக்கிறது.
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பி.எல்.ஐ. எஸ்.சி மற்றும் எம்.எல்.ஐ.எஸ்.சி. போன்ற படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை எண்ணற்ற நூலகர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. தனியார் நூலகத்தில் மட்டுமின்றி பள்ளி, கல்லூரிகள், அறிவு ஆய்வுக் கூடங்கள், சமூக அறிவியல் ஆய்வகங்கள், சட்டப் பேரவை, நாடாளுமன்றம் உள்ளிட்ட பல்வேறு இடங்க
ளில் காலியாகவே உள்ளன. எனவே இப்படிப்பை தேர்வு செய்வதன் மூலம் வேலை வாய்ப்புகளை எளிதில் பெரும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment