Monday, May 28, 2012

தளபதிக்கு மட்டும் ஏன் இப்படி?


Courtesy : gokul manathil 


பதிவின் ஆரம்பத்திலே சொல்லி விடுகிறேன் நான் தல ரசிகனோ தளபதி ரசிகனோ 

கிடையாது.இது வரை நான் யாருடைய ரசிகன் என எனக்கே தெரிந்ததில்லை.மொத்தத்தில் 

ஒரு சினிமா ரசிகன் அவ்வளவுதான்(அப்பாடா நடுநிலை விளக்கம் கொடுத்தாச்சு)



தமிழ் சினிமாவுல யாருதான் தோல்விப்படம் கொடுக்கல?நம்ம சூப்பர்ஸ்டாரே தோல்வி 

கண்டிருக்கிறார்.அப்பறம் ஏன் விஜய் மட்டும் எஸ்.எம்.எஸ்களிலும், facebook,twitter,blog 

இன்னும் என்னென்ன இருக்கிறதோ எல்லாவற்றிலும் கண்ணாபின்னாவென்று கலாய்க்கப்பட 

என்ன காரணம்?அப்படி கலாய்ப்பவர்கள் தல ரசிகர்களா?அப்படினா தல படம் வரும் போது 

தளபதி ரசிகர்களால் படாத பாடு படனுமே?படுது ஆனா ரொம்ப கம்மியாத்தான்.அப்படின்னா 

தளபதி ரசிகர்கள் மாற்றான் தோட்டத்து மல்லிகையை ரசிக்கும் 

கண்ணியம்(கடமை,கட்டுப்பாடு இல்லையான்னு கேக்காதீங்க) மிக்கவர்களா?என்ன தான் 

நடக்கிறது?



தல அப்படியென்ன சாதனை செஞ்சுட்டார்? கொஞ்ச நாள் கழித்து திரும்பிப்பார்க்கும் போது 

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்று என்று இவரது படம் ஏதாவது இருக்குமா?

இல்லை தளபதியைவிட அதிக ஹிட் கொடுத்து விட்டாரா?எனக்குத்தெரிந்து தளபதியை 

விட இவரே அதிக பிளாப்பை கொடுத்திருக்கிறார் என நினைக்கிறேன். 

ஜனா,ராஜா,ஆழ்வார்,ரெட்,ஆஞ்சநேயா,ஜீ போன்றவை உதா”ரணங்கள்”.அவ்வளவா தமிழ் 

சினிமாவின் பெரிய இயக்குனர்கள்  என சொல்லப்படும் இயக்குனர்களின் படங்களிலும் 

நடித்ததில்லை.



நம்ம தளபதி என்ன செய்திருக்கார்?ஆ”ரம்ப” காலங்களில் சங்கவி,சுவாதி போன்றோருடன் 

அவரது அப்பா(டேக்கர்)வின் படங்களில் நடித்து(!) தமிழ் சினிமாவில் தனது இடத்தை தக்க 

வைத்துக்கொண்டார்.அவரை பலருக்கும் எடுத்துச்சென்ற படம் 'லாலா' புகழ் விக்ரமனின் 

பூவே உனக்காக.அப்பறம் காதலுக்கு மரியாதை மூலமாக இளைஞர்களின் குறிப்பாக 

காதலர்களின் மனத்தில் இடம் பிடித்தார்.அதன் பிறகு ரஜினி வழியை ,எம்.ஜி.ஆர் வழியை 

பின் பற்றுகிறேன் என்று ஐஞ்சு பாட்டு,நாலு பைட்டு,பார்முலாவில் குதித்து அதையே இன்று 

வரை தொடர்கிறார்.ஆனால் ரஜினி நடுநடுவே பார்முலாவில் இருந்து விலகி நடித்த 

படங்களையும் ஆரம்ப காலங்களில் தர மான படங்களில் நடித்து தன்னை திரையுலகில் 

நிலை நாட்டியத்தையும் மறந்து விட்டார்(முள்ளும் மலரும்,ஜானி,போன்ற சில படங்கள்).



 தல நடித்(டந்)ததில் அவரை ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்த்தது 

வாலி,அமர்க்களம்,தீனா போன்றவை.ஆனா பாருங்க இதுல எல்லாமே அவரு நெகடிவ் 

ரோல்ல நடிசிருப்பாரு.(பல காலமா நம்ம சினிமாவுல ஹீரோ வில்லன் ரெண்டு பேரும் 

ஒரே வேலைய தான செய்யுறாங்க).இதுல தீனா தல’க்கு ஒரு மாஸ் படம்.அப்படி ஒரு படம் 

தளபதிக்கு கில்லி,அப்பறம் போக்கிரி புண்ணியத்துல ரொம்ப நாள் கழிச்சு தான் கிடைச்சது.




நாலு பைட்டு,ஐஞ்சு பாட்டு பார்முலாவில் இருவருமே இருந்தாலும் அந்த பாட்டுக்கும் 

பைட்டுக்கும் இருக்கும் இடைவெளியில் உள்ள விஷயங்கள்தான் இங்கே 

முக்கியம்.தளபதியாரின் படங்களில் அவை எல்லா 

படங்களிலும்(சிவகாசி,திருப்பாச்சி,குருவி,வேட்டைக்காரன்,சுறா,வில்லு,ஆதி) ஒரே மாதிரி 

வருவது,பைட்டுகளில் அளவுக்கதிகமா தாவிக்குதிக்கறது(அதனாலதான அணில்?),அப்பறம் 

அரசியல் ஆர்வம்,அவங்க அப்பாவோட பேட்டிகள்,டாகுடர் பட்டம் இதெல்லாம் அவரோட 

இமேஜை நடுநிலை ரசிகர்கள் மத்தியில் டேமேஜ் ஆகிடுச்சு.இவர் இடைக்காலங்களில் 

நடித்த து.ம.துள்ளும்,குஷி,பிரண்ட்ஸ் போல தொடர்ந்திருந்தால் கூட இந்த அளவுக்கு ஆகி 

இருக்கிறது என நினைக்கிறேன்.



இந்த ஐஞ்சு பாட்டு நாலு பைட்டுக்கு நடுவுல தல படத்துல ஏதோ கொஞ்சம் 

வித்தியாசத்தை(முகவரி,க.கொ க.கொ,சிட்டிசன்,வரலாறு,வில்லன்,பில்லா,மங்காத்தா)காட்டி 

வருவது,அரசியலில் ‘தல’யிடாதது ஆதரவின்றி திரையுலகில் தடம் பதித்த திறமை,ரசிகர் 

மன்றத்தை கலைத்த அதிரடி,ஒளிவு மறைவில்லா பேச்சு போன்ற சில ஆரோக்கியமான 

விஷயங்கள் இவரை கலாய்க்க யோசிக்க வைக்கிறது.



கவனிக்க பெரும்பாலும் கலாய்ப்பது நடுநிலை ரசிகர்களே.அப்பறம் தளபதி புதிய 

வெற்றியின் மேல நம்பிக்கையில்லாம அதிகம் ரீமேக் பண்றதும் ஒரு 

காரணமாயிருக்கலாம்.இப்ப கொஞ்சம் மாற்றம் இருக்காப்புல தெரியுது தளபதியோட 

மூவ்ல.ஷங்கர்,முருகதாஸ்,கெளதம்மேனன்,விஜய்,சீமான் படங்கள்ல அடுத்தடுத்து 

நடிக்கப்போறதா இருக்கு இது ஒரு நல்ல மாற்றம் போல தெரியுது.பாப்போம்.அப்படி நல்ல 

மாற்றங்கள் வந்தும் தொடர்ந்து கலாய்ப்புகள் தொடர்ந்தா அது நடுநிலை ரசிகர்கள் அல்ல 

என்பது நிச்சயம்.


டிஸ்கி-மீண்டும் ஒரு முறை ஆரம்ப வரிகளைப்படிக்க.  

No comments:

Post a Comment